2024 மாருதி சுசூகி ஸ்விஃப்டின் வேரியண்ட் வாரியான வசதிகள்

மாருதி சுசூகி வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்விஃப்ட் காரில் LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ (கூடுதலாக டூயல் டோன்) என ஐந்து விதமான வேரியண்டில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் பெற்ற 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டரில் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனை கொண்டுள்ளது. மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.8 கிமீ மற்றும் ஏஜிஎஸ் வேரியண்ட் லிட்டருக்கு 25.72 கிமீ வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாருதி ஸ்விஃப்ட் வேரியண்டிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் உதவி, 3 புள்ளி இருக்கை பெல்ட்டுகள், ESC, பின்புற டிஃபோகர் மற்றும் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளது.

Swift  LXi 5MT

துவக்க நிலை LXi 5MT வேரியண்டில்

  • ஹாலோஜன் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்
  • LED டெயில் விளக்குகள்
  • 14 அங்குல ஸ்டீல் வீல்
  • கிரில், விங் மிரர் மற்றும் கதவு கைப்பிடிகளில் கருமை நிறம்
  • பாடி கலர் பம்பர்கள்
  • பவர் விண்டோஸ்
  • மேனுவல் அட்ஜெஸ்ட் மிரர்
  • டில்ட் ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்

Swift VXi 5MT, AGS

LXi 5MT வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • 14 அங்குல ஸ்டீல் வீல்க்கு வீல் கவர்
  •  கிரில், விங் மிரர் மற்றும் கதவு கைப்பிடிகளில் பாடி நிறம்
  • ரியர் பார்ஷல் டிரே
  • 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  •  SmartPlay Pro கனெக்ட்டிவிட்டி வசதி
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே
  • OTA மேம்பாடு
  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடு சுவிட்சுகள்
  • 4 ஸ்பீக்கர்கள், 2 ட்விட்டர்கள்
  • Type-A சார்ஜிங் போர்ட்

Swift VXi (O) 5MT, AGS

VXi வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • பவர் ஃபோல்டிங் விங் மிரர்
  • ஸ்மார்ட் கீ
  • எஞ்சின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்
  • சுசூகி கனெக்ட் வசதிகள்

swift car

Swift  ZXi 5MT, AGS

VXi (O) வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்
  • LED DRL
  • 15 அங்குல அலாய் வீல்
  • லக்கேஜ் பகுதிக்கு விளக்கு
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
  • வயர்லெஸ் சார்ஜர்
  • ஆட்டோமேட்டிக் ஏசி
  • பின்புற ஏசி வென்ட்
  • வாஷருடன் பின்புற வைப்பர்
  • ஃபாலோ-மீ-ஹோம் வசதி பெற்ற ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்
  • 60:40 ஸ்பிளிட் இருக்கை
  • யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்

Swift ZXi+ 5MT, AGS

ZXi வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • 15 அங்குல மெசின் கட் அலாய் வீல்
  • முன் LED மூடுபனி விளக்குகள்
  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்
  • முன்பக்க பேடெல் விளக்கு
  • பின்புற பார்க்கிங் கேமரா
  • 9-இன்ச் SmartPlay Pro+ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • Arkamys ஆடியோ சிஸ்டம்
  • க்ரூஸ் கண்ட்ரோல்

ZXi+ வேரியண்டில் கூடுதலாக மேற்கூறை கருப்பு நிறத்துடன் வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் ZXi+ DT என்ற வேரியண்டும் கிடைக்கின்றது.

மாருதி சுசூகி ஸ்விஃபட் 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.