டாடாவின் சக்திவாய்ந்த அல்ட்ரோஸ் ரேசர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

டாடா மோட்டார்சின் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலாக அல்ட்ரோஸ் ரேசர் விறபனைக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் என்ஜின், சிறப்பு வசதிகள் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் உற்பத்தி நிலை மாடல் காட்சிக்கு வந்ததை தொடர்ந்து விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் இடம்பெற உள்ள ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் வேரியண்டில் நெக்சானில் உள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறக்கூடும்.

‘Racer’ என்ற பேட்ஜிங் உடன் மிக நேர்த்தியான ரேசிங் ஸ்டிரிப் பெற்ற பாடி கிராபிக்ஸ் உடன் அடிப்படையான வடிவமைப்பினை அல்ட்ரோஸ் மாடலில் இருந்து பெற்றாலும் கிரில், பம்பர் மற்றும் புதிய அலாய் வீல் கொண்டுள்ளது.

இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட வண்ண நிறங்களுடன் ஸ்போர்ட்டிவான வெளிப்பாடினை வழங்கும் நோக்கில் அப்ஹோல்ஸ்ட்ரி, இருக்கைகள் மற்றும் டேஸ்போர்டில் சிறிய அளவிலான மாறுதல்களை பெற்றிருக்கலாம். மற்றபடி, அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் உடன் ESC, ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட், 3 புள்ளி இருக்கை பெல்ட்டுகள் போன்ற அடிப்படையான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும்.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் ஐ20 Nline மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் பெர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக வரவுள்ள அல்ட்ரோஸ் ரேசர் விலை ரூ.9.50 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள்ளது.

altroz racer

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.