விடா முயற்சி விஸ்வரூப வெற்றி நீட் தேர்வில் சாதித்த டீ விற்கும் இளைஞன்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான்.  அசாம் மாநிலம், பஜாலி மாவட்டம், பட்டசர்குர்சி சவுக் பகுதியில் வசிப்பவர் ராகுல்தாஸ் (24). இவரது தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு சென்று விட்டார். 2 பிள்ளைகளுடன் வறுமையில் சிக்கி திணறிய ராகுலின் தாய், டீ கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வறுமை காரணமாக ராகுல் 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.பின்னர், தாய்க்கு உதவியாக டீ … Read more

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி கைது

சென்னை: ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி மாம்பாக்கம் பிரபு ஸ்ரீபெரும்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் மாம்பாக்கம் பிரபுவை கைது செய்தனர்.

ஜாதியை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன்ஜாமீன்: பஞ்சாப் – அரியானா ஐகோர்ட் உத்தரவு

மும்பை: குறிப்பிட்ட பிரிவினரின் ஜாதியை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன் ஜாமீனை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. பிரபல ஹிந்தி ‘டிவி’ தொடர் நடிகை முன்முன் தத்தா கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் பல மாநில போலீசாரிடம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சூடுபிடிக்கும் பஞ்சாப் தேர்தல் களம்; காங். முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு: லூதியானாவில் ராகுல் பிரசாரம்

லூதியானா: பஞ்சாப் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, லூதியானாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார். பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவிப்பதற்கு முன்பு, அக்கட்சி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதேபோல, அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்று மக்களிடம் காங்கிரஸ் கருத்துக்கணிப்பு எடுத்துவருகிறது. தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. … Read more

சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்யுங்கள்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பதவி உயர்வு, ஊதிய நிலுவை கோரி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கண்ணம்மாள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இளநிலை உதவியாளராக கண்ணம்மாள் பணியாற்றியபோது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை எனவும் தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வுக்கு … Read more

பாஜகவுக்கு தாவிய மணிப்பூரி நடிகர்: மணிப்பூர் தேர்தலில் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த நடிகர் சோமேந்திர சிங் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மணிப்பூரில் வரும் 27 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக கட்சியில், ‘கைகூ’ என்று அழைக்கப்படும் மணிப்பூரி திரைப்படத்தில் நடித்த நடிகர்  ஆர்.கே.சோமேந்திர சிங் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலர் நேற்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் பாஜகவில இணைந்தனர். அப்போது மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பத்ரா, மாநில … Read more

ஐசிசி யு-19 உலக கோப்பை பைனல்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆன்டிகுவா: ஐசிசி யு-19 உலக கோப்பை பைனலில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆன்டிகுவாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

சிங்கத்திற்கு உணவளித்த கவர்ச்சி நடிகையின் ‘கணக்கு’ முடக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: சிங்கத்திற்கு உணவளித்த ஒருசில நாளில் நடிகை நோரா ஃபதேஹியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேஹி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்துவார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பதிலளித்தும் வருவார். இந்நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவரது ரசிகர்களால் பார்க்க … Read more

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு..!!

டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலவே மீதமுள்ள நாட்களிலும் அவையை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.