கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறினாலும் வெளியே எங்களின் போராட்டம் தொடரும்: மாணவிகள் தகவல்

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி இன்று முதல் ஏப்.-ம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் பாக்கல ராமதாஸ் அறிவித்துள்ளார். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளும் வெளியேற வேண்டும் என லாஷேத்ரா முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 30லிருந்து ஏப்.6-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கலாஷேத்ராவை விட்டு … Read more

சம்பள விஷயத்தில் பாரபட்சம்: சமந்தா ஓபன் டாக்

சென்னை: சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சகுந்தலை, துஷ்யந்தன் காதலை மையப்படுத்தி குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் உள்பட பலர் …

பாபர் மசூதி விவகாரம் ஆக்கிரமிப்பு இடத்தை ஒப்படைக்க உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு

புதுடெல்லி: பாபர் மசூதி விவகாரத்தில் கட்டுமானத்திற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எந்த தடையும் கிடையாது என கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  இதையடுத்து, ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக ராமர் கோயில் கட்டும் பணியானது துவங்கி தொடர்ந்து நடந்து … Read more

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு பினராயிக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தா இன்று தீர்ப்பு: கேரள அரசியலில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில்  முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளை மீறி நிதி உதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் மற்றும் 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. விசாரணை முடிந்து ஒரு வருடம் ஆன பிறகும் இந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிரான இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிடவேண்டும் என்று … Read more

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 3,414 பேருக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக வழங்க ரூ.1,031,32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதவி இயக்குனர்களுக்கு தலா 1 கிரவுண்ட் நிலம் வழங்கிய வெற்றிமாறன்

சென்னை: தனது உதவி இயக்குனர்களுக்கு தலா 1 கிரவுண்ட் நிலம் வழங்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை …

போலீஸ் வாகனம் மீது குண்டு வீச்சு பாகிஸ்தானில் 4 போலீசார் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் நகரில் காவல்நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீஸ் வாகனத்தில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தான்  தலிபான்கன் பொறுப்பேற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மீமிசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மீமிசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகன்(71) என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெரியப்பா ரங்கனு(70) ஆயுள் தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்கா: கென்டகியில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயிற்சியில் ஈடுபட்டபோது 2 பிளாக்ஹாக் ரகஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர்.

ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோவிலில் பற்றிய தீ: அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய பக்தர்கள்

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் தீப்பற்றியதால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். ஸ்ரீராம நவமி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் தனுகு மண்டலத்தில் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஸ்ரீராம நவமிக்கான பூஜையையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக பனை ஓலையை கொண்டு கோயில் முழுவதும் நிழற்பந்துகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று … Read more