கும்பகோணம் மகாகாளியம்மன் கோயிலில் திருநடன வீதிஉலா

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுந்தர மகாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 132ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா, கடந்த மார்ச் 25ம் தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பச்சை காளி, பவள காளி நடன வீதியுலா நேற்று நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயில் வளாகத்தில் … Read more

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனை மாதவரத்தில் போலீசார் கைது செய்தனர்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 59,106 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 59,106 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 17398 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சாத்தூரில் நள்ளிரவில் பரபரப்பு தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: 14 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

சாத்தூர்: சாத்தூரில் நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு டிரைவர் பயணிகளை கீழே இறக்கியதால் 14 பேர் உயிர்தப்பினர்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன்(45) ஓட்டி வந்தார். பஸ்சில் 14 பயணிகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நள்ளிரவு 12.45 மணியளவில் பஸ் வந்தபோது, திடீரென … Read more

பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

சென்னை: பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசித்து வருகிறார்.

வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது: மல்லிகார்ஜூன கார்கே!

டெல்லி: வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீகார், மேற்குவங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீகாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட … Read more

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணுக்கு இணை நோய்கள் இருந்ததாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரையரங்கு, வணிக வளாகங்கள், மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹரிபத்மன் மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாளில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது: பிரதமர் மோடி தமிழில் கடிதம்

டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பை கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் ஈரோட்டை சேர்ந்த யோக தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு  பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பையும், அக்கறையும் பாராட்டுகிறேன். காசி-தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது. நாட்டை ஒன்றிணைப்பதில் எனது முயற்சிகளை இரட்டிப்பாக்க இத்தகைய … Read more

செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது

தூத்துக்குடி: செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு. ஒருதலையாக காதலித்த இளைஞர் சோலையப்பன் பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாள் வீட்டில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சோலையப்பன் கைது செய்யப்பட்டார்.