ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா!

அன்னபூரணி படத்திற்கு பிறகு டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில் நடித்த நயன்தாரா அதன் பிறகு ஹிந்தியில் புதிய படங்களில் கமிட்டாகவில்லை என்ற போதும் சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஹாலிவுட் ஹீரோயின்களை போன்று படுகவர்ச்சியான ஒரு கருப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நயன்தாரா. … Read more

வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம்

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலமாக கேரளா மட்டுமல்லாது தமிழகம் மற்றும் ஆந்திரா என தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக மாறியவர் மமிதா பைஜூ. குறிப்பாக இளைஞர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ‛ரெபல்' படத்திலும் நடித்தார். இவர் இன்று கேரளாவில் இரண்டாம் கட்டமாக நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளார். ஆம்… இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மகள் … Read more

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்!

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சார்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்று இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி அமரன் பட குழுவினர் சல்யூட்டிங் மேஜர் முகுந்த் … Read more

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சலார் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி இணைந்துள்ளதாக … Read more

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா… பில்லாவா…

என்னதான் விஜய்யும், அஜித்தும் தங்களை நெருக்கமான நண்பர்களாக காட்டிக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் இப்போதும் எலியும், பூனையுமாகத்தான் இருக்கிறார்கள். இதனை தயாரிப்பாளர்கள் வியாபார யுக்திக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது ரீ ரிலீஸ் டிரண்டிங்கிலும் தொடர்கிறது. சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'கில்லி' படம் 12 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 'பில்லா' படத்தை வெளியிட இருப்பதாக … Read more

மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்

'தடம்' படத்தில் இரண்ட வேடங்களில் நடித்திருந்த அருண் விஜய் தற்போது நடித்து வரும் 'ரெட்ட தல' படத்திலும் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இரண்டு வேடத்திற்கும் சித்தி இட்னானி, தன்யா ஜோடியாக நடிக்கிறார்கள். ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் அருண் விஜய் பேசும்போது … Read more

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர்

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் அந்த படத்தின் கதை, அதில் அதிகம் இடம் பெற்ற தமிழ் கதாபாத்திரங்கள், தமிழ் வசனங்கள், குறிப்பாக நடிகர் கமல், அவரது குணா திரைப்படம், குணா குகை, கண்மணி அன்போடு பாடல் என பல விஷயங்களில் தமிழக ரசிகர்களுடன் ஈஸியாக கனெக்ட் ஆனது. அதனால் கேரளாவில் பெற்ற அளவிற்கு தமிழகத்திலும் அந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியும் வசூலும் கிடைத்தது. அந்த சமயத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் … Read more

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர்

ஒரு காலத்தில் தனது துறையில் உச்சத்தில் இருந்து விட்டு கடைசி காலத்தில் கஷ்டத்தில் வாழ்ந்தவர்கள் சினிமாவில் அதிகம். தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் சாப்பிட்டு விட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் பசியால் படுத்துக் கிடந்தார். சாவித்ரி சொகுசு காரில் பயணம் செய்து விட்டு கடைசி காலத்தில் கை ரிக்ஷாவில் பயணித்தார். இப்படி நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம். சினிமா இசை வாய்ப்பு தேடி சென்னை வந்த சுதர்சனம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஏவிஎம் … Read more

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்!

தற்போது 'கோட்' படத்தில் நடித்து வரும் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்களாம். இதற்கு முன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த சமந்தாவும், பைரவா, சர்க்கார் போன்ற … Read more

ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன்

தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ராயன் படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் ஜூன் மாதத்தில் இந்தியன் 2, கல்கி ஏ.டி 2898 போன்ற … Read more