காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்?

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகர் கமல்ஹாசனின் வாரிசு என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தனது திறமையால் ஒரு முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்தார். தன் தந்தையை போலவே சுதந்திரமாக செயல்படும் குணம் கொண்ட ஸ்ருதிஹாசன் மும்பையைச் சேர்ந்த சாந்தனு ஹஸாரிகா என்பவருடன் கடந்த பல வருடங்களாக மும்பையில் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். தங்களது காதல் பற்றி எந்த இடத்திலும் மறைக்காத ஸ்ருதிஹாசன் பொது இடங்களுக்கு காதலனுடன் வருவது மற்றும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் … Read more

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு

'பாரத ரத்னா' விருது பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் நினைவாக அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பத்மினி கோலாபுரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு வழங்குவதாக அறிவித்தார்கள். இந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் “கேட்போரின் … Read more

மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு

நடிப்பு, இயக்கம் என பயணித்து வருகிறார் தனுஷ். தனது 50வது படமான ராயன்-ல் நடித்து, இயக்கி முடித்துள்ளார். இதுதவிர நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் 51வது படமான 'குபேரா' படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து … Read more

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன்

தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட்டில் சென்று கால் பதித்தாலும் அங்கே நிலைத்து நிற்பது ரொம்பவே கடினம். ஆனால் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை ஹிந்தியில் 27 படங்களை இயக்கியுள்ள அவர் கடந்த 2009, 2010 என இரண்டு வருடங்களில் மட்டும் தொடர்ந்து ஐந்து ஹிந்தி படங்களை அவர் இயக்கி உள்ளார். கடந்த 2021ல் 'ஹங்குமா 2' படத்தை இயக்கிய பிரியதர்ஷன் மூன்று வருடங்களுக்கு பிறகு … Read more

சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வில்லனாக வித்யூத் ஜம்வால் நடித்து வருகிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பீஜூ மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

கடந்த ஆண்டில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த படம் ' அயோத்தி ' இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல்படத்திலேயே கவனம் பெற்று மந்திர மூர்த்தியின் அடுத்த படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இவரின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை பிரபல பைனான்சியரும், கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கிறார் … Read more

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. காமெடி கேங்ஸ்டர் படமாக உருவான இந்த படத்தில் ரங்கா என்கிற நகைச்சுவை கலந்த தாதா கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். ஏற்கனவே ரோமாஞ்சம் என்கிற ஹிட் படத்தை கொடுத்திருந்த இயக்குனர் ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று தற்போது 100 கோடி வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை … Read more

'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ?

'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளிவர உள்ள இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்குமான சம்பளம் மட்டுமே சுமார் 250 கோடியைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கதாநாயகன் பிரபாஸ் சம்பளம் 150 கோடி, படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் அமிதாப்பச்சன், சிறப்புத் தோற்றத்தில் … Read more

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜா. சென்னை, தி.நகரில் இவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி நேகாவின் தங்க நகைகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக இவரது வீட்டு பணிப்பெண் லட்சுமி என்பவர் மீது சந்தேகம் வர அவர் மீது மாம்பலம் போலீசில் புகார் அளித்தார் ஞானவேல்ராஜா. இதையடுத்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் … Read more

மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல்

தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் தனியார் டிவி, வரும் நாட்களில் பல புதிய தொடர்களை ஒளிபரப்ப உள்ளது. மல்லி, ஆடுகளம், வாரணம் ஆயிரம் என அடுத்தடுத்து பல சீரியல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் ஆடுகளம் தொடரில் டெல்னா டேவிஸ் மற்றும் சல்மானுள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மூத்த நடிகர்களான டெல்லி கணேஷ், சச்சு ஆகியோர் இணைந்துள்ளனர்.