அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல

மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக தனது 36வது படத்தில் நடிக்கின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். சமீபத்தில் படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு 'ரெட்ட தல' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் … Read more

மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் படிக்க வைத்த பல மாணவர்கள் தற்போது சம்பாதிக்க தொடங்கி இருப்பதை தொடர்ந்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவை மையத்தை மே … Read more

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் – இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை : பாடல்கள் உரிமம் தொடர்பாக பாடலாசிரியர்களும் உரிமம் கோரினால் என்னவாகும் என இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, … Read more

சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் கஜினி, ஹாலிடே போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சிறு இடைவெளிக்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது நடிகர் சல்மான் கானை வைத்து ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட முன்னனி நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டது. இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் … Read more

மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்'

'மதுபானக்கடை, வட்டம்' ஆகிய படங்களை இயக்கியவர் கமலகண்ணன். தற்போது காளி வெங்கட் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‛குரங்கு பெடல்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி உருவாகி உள்ளது. சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவனது தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் … Read more

‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி

மோகன்லால் மலையாளத்தில் தற்போது தன்னுடைய 360வது படத்தில் நடித்து வருகிறார். 15 வருடங்களுக்கு பிறகு நடிகை ஷோபனா மோகன்லாலுடன் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மோகன்லால் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் அனிருத் இசையில் ஹிட்டடித்த ஜிந்தா பந்தா என்கிற … Read more

பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள்

பக்தி இசையில் புகழ்பெற்று விளங்கியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த இவர்கள் சூலமங்கலம் கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர். இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்களில் ராஜலட்சுமி 1992ம் ஆண்டு தனது 51வது வயதில் இறந்து விட்டார். ஜெயலட்சுமி 2017ம் ஆண்டு தனது 80வது வயதில் காலமானார். இன்று ஜெயலட்சுமியின் 90வது பிறந்தநாள். சூலமங்கலம் … Read more

ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்'

மலையாள சினிமா இந்த வருடம் ஆச்சரியங்களுக்கு மேல் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்த ஆண்டின் 4வது 100 கோடி படமாக 'ஆவேஷம்' அமைந்துள்ளது. இரண்டே வாரங்களில் இந்த சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் பஹத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெயசங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான படம் இது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் இந்தியாவில் சுமார் 60 கோடியும், வெளிநாடுகளில் 40 கோடியும் வசூலித்து ரூ.100 … Read more

விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல்

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி என்ற படத்தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன் 21.29 கோடியை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக விஷால் நடிக்கும், தயாரிக்கும் படங்களின் வியாபாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தந்தைத்த விஷால் மீறியதாக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் … Read more

நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு நடிகர் சங்க நிர்வாகத்தில் நடந்த குழப்பங்கள், தேர்தல்கள், வழக்குகளால் 40 சதகிவித பணியோடு சங்க கட்டிடம் நின்று போனது. முன்பு திட்டமிட்டடதை விட இப்போது கட்டித்தின் பட்ஜெட் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் நடிகர் சங்கம் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளிடம் நிதி கேட்டு வருகிறது. அதோடு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. நடிகர்கள் … Read more