தனுஷ் பாசத்தில் யாத்ரா தனுஷ் : வைரலாகும் புகைப்படம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்ததாக ஜனவரி மாதம் அறிவித்தனர். தற்போது இருவரும் அவரது பணிகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ், நானே வருவேன், வாத்தி படங்களில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தனது ஆல்பம் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இப்போது, இதை நான் இதற்கு முன்பு எங்கே பார்த்தேன்? #யாத்ராதனுஷ். #நானேவருவேன் என பதிவில் எழுதியுள்ளார் தனுஷ். … Read more

'காட்பாதர்' படப்பிடிப்பை முடிக்கப் போகும் நயன்தாரா

மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு சிரஞ்சீவி மனைவியாக 'சைரா' படத்தில் நடித்த நயன்தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடித்து வருகிறார்.. மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'தனி … Read more

ஸ்வஸ்திக்கை அவமானப்படுத்த கூடாது கனடாவில் ஹிந்து அமைப்பு வலியுறுத்தல்| Dinamalar

வாஷிங்டன்:’ஹிந்துக்கள் புனிதமாக கருதும் ‘ஸ்வஸ்திக்’ சின்னத்தை, ‘நாஜி’க்களின் சின்னத்துடன் ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்த கூடாது’ என, வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஹிந்து அமைப்பு தெரிவித்துள்ளது.‘கனடாவில் லாரி ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்; தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர்’ என அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் … Read more

இந்தியாவில் மேலும் 67 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,54,315 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 67,538 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,10,984 ஆனது. தற்போது 3,32,918 பேர் சிகிச்சையில் … Read more

‛உறவுகள் தொடர்கதை' – மீண்டும் இணைந்த இளையராஜா, கங்கை அமரன்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் உடன்பிறந்த தம்பி கங்கை அமரன். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு கங்கை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். படங்களை இயக்கவும் செய்தார். அவரது இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் வாரிசுகள் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல், சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். குடும்ப நிகழ்வுகள், விழாக்களில் … Read more

நான்கு நாள் வேலை பெல்ஜியம் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ்:வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.கடந்த, 2021 செப்.,ல் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிச.,ல் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் … Read more