2ம் நாளாக முடங்கிய கர்நாடக சட்டசபை இரவு, பகல் தர்ணா ஆரம்பித்த காங்கிரஸ்| Dinamalar

பெங்களூரு-கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தி காங்கிரசார் இரண்டாவது நாளாக சட்டசபையை முடக்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அவரை நீக்கும்வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்று, சட்டசபையிலேயே தங்கி, இரவு, பகல் தர்ணா நடத்தி வருகின்றனர்.டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தொடர்பாக கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர்.எனவே அவரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க … Read more

இசையமைப்பாளராக களமிறங்கும் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் அடுத்து இசையமைப்பாளராக களமிறங்க உள்ளார். இவர் இசையமைக்கும் முதல் படத்தை இவரின் தம்பி ஆதித்யா இயக்குகிறார். இதில் நாயகனாக எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் படம் வெளியாக உள்ளது.

54 செயலிகளுக்கு இந்தியா தடை: சீன அரசு கவலை| Dinamalar

பீஜிங் : சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 54 செயலிகளுக்கு, சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்து, … Read more

சர்ச்சைக்குரிய மாத்திரை ரூ.47 கோடிக்கு விற்பனை| Dinamalar

புதுடில்லி: சர்ச்சைக்கு மத்தியில், கடந்த ஜனவரியில் மட்டும், 47 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.2 கோடி, ‘மோல்னுபிரவிர்’ கொரோனா மாத்திரைகளை, இந்திய மக்கள் வாங்கி உள்ளனர். நாட்டில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது முதல், அதற்கு பல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தன. கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவிர் மாத்திரைக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, நாட்டில் உள்ள 13 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மோல்னுபிரவிர் … Read more

பதிலுக்கு அன்பைத் தரும் பூஜா ஹெக்டே

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. பாடலைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தாலும், இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்தப் பாடல் தற்போது யுடியுபில் 4 கோடி பார்வைகளைத் தொட உள்ளது. இப்பாடல் இந்த அளவிற்கு ஹிட்டானதில் மற்றவர்களை விட படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். தினமும் பாடலைப் பற்றி … Read more

புதிய டெல்டக்ரான் வைரஸ்: பிரிட்டனில் பாதிப்பு அறிகுறி| Dinamalar

லண்டன் : பிரிட்டனில், கொரோனா வைரசின் உருமாறிய, ‘டெல்டக்ரான் வைரஸ்’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்வதாக, பிரிட்டன் சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வைரஸ், இந்தியா உட்படஉலகளவில் இரண்டாவது அலையாக பரவி, பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ், மூன்றாவது அலையாக பரவி உலகை வாட்டி வருகிறது. இந்நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் கள் இணைந்த, ‘டெல்டக்ரான்’ எனும் உருமாறிய கொரோனா வைரஸ், … Read more

காவல் சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு| Dinamalar

புதுடில்லி:இமயமலையில், பூஜ்ஜியத்திற்கும் குறைவான கடும் குளிர் மற்றும் முழங்கால் வரை புதையும் பனி மலையில், வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும், ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. பனி மலைகள் சூழ்ந்த எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, 1962ல் உருவாக்கப்பட்டது. இந்தப்படையின் வீரர்கள், லடாக்கின் கரகோனம் பாஸ் துவங்கி, அருணாசல பிரதேசத்தின் ஜாசெப் லா வரை 3,488 கி.மீ., தொலைவுள்ள எல்லைப் பகுதியை … Read more