ரகசிய ஆவணம் கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி கைது| Dinamalar

புதுடில்லி : லஷ்கர் – இ – தொய்பா அமைப்பிற்கு, ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்த் திக்விஜய் நேகியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற, தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு, சிலர் உதவி வருவதாக கடந்த ஆண்டு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த நவம்பர் 6ல் வழக்குப் பதிவு செய்து, … Read more

'வலிமை'யை பீட் செய்த 'பீஸ்ட்'

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பிப்ரவரி 14ம் தேதியன்று யு டியூபில் வெளியானது. வெளியான 24 மணி நேரங்களுக்குள் தென்னிந்திய அளவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற புதிய சாதனையைப் படைத்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் 'கலாவதி' பாடல் படைத்த சாதனையை உடனடியாக முறியடித்தது 'அரபிக்குத்து'. பாடலுக்கு சிலர் … Read more

காதலுக்காக துளு மொழி கற்றுக்கொண்ட சித்து

கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக நடித்து வந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான் ரீலிலும், ரியலிலும் பல ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்று கூறலாம். திருமணத்திற்கு முன்னும் சரி, பிறகும் சரி இவர்களது காதல் வாழ்க்கை என்பது செடியில் பூத்த புத்தம் புது ரோஜாவை போல் அழகாக சிரிக்கிறது. சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா அஞ்சனிடம் இருவரது காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரேயா, … Read more

இன்று 108 சங்காபிேஷகம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி, சாரத்தில் தங்கியுள்ள தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு இன்று 108 சங்காபிேஷகம் நடக்கிறது.புதுச்சேரி, வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில், பங்கேற்ற, தீவனுார் பொய்யாமொழி விநாயகர், சாரம் சித்தி புத்தி விஜயகணபதி கோவிலில் தங்கியுள்ளார்.தீவனுார் விநாயகருக்கு, சாரம் மாசிமக வரவேற்பு குழு சார்பில், இன்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.இரவு மின் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா வந்து … Read more

அரபிக்குத்துக்கு சமந்தாவின் ஆட்டம்

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இப்பாடலை மிக அதிகமாக பிரமோஷன் செய்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தாவும் இந்தப் பாடலுக்கு நடனமாடி ஒரு ரீல் வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். … Read more

கொரோனாவால் பங்கேற்காதவர்களுக்கு 21, 22ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.| Dinamalar

புதுச்சேரி : கொரோனா தொற்றால் போலீஸ் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு, 21, 22ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், ரேடியோ டெக்னிஷியன்-12, டெக் ஹேண்ட்லர்-29 பணியிடங்கள் நிரப்புவதிற்கான உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி நடந்தது.கான்ஸ்டபிள் பணி உடற்தகுதி தேர்வில் ஆண்கள் 1,844 பேர், பெண்கள் 478 பேர் தேர்வாகி உள்ளனர். டெக் ஹேண்ட்லர் பணிக்கு நடந்த நீச்சல் தேர்வில் 220 பேர் தேர்வு … Read more

அனுமதி கேட்ட பிருந்தா : தமாஷ் பண்ணிய மணிரத்னம்

பல வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா முதன்முறையாக 'ஹே சினாமிகா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கான டைட்டில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற ஏய் சினாமிகா என்கிற பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டது என்பது நமக்கு … Read more