உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம்..! – ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்,  முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால் … Read more

பிரதமர் மோடி பஞ்சாப் வருகையால் விவசாய சங்க தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

ஜலந்தர்,  பிரதமர் மோடி, கடந்த மாதம் பஞ்சாப்புக்கு சென்றபோது, விவசாய சங்கத்தினரின் மறியல் போராட்டத்தால் டெல்லிக்கு திரும்ப செல்ல வேண்டியதாகி விட்டது. அச்சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக நேற்று அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அவர் வருகையின்போது மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். விவசாய சங்க தலைவர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை படையெடுத்தனர். அவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்கள் வீடு அமைந்துள்ள கிராமங்களை … Read more

இந்தியா-நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது..!

குயின்ஸ்டவுன், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த 12-ந்தேதி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. அந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மிதாலிராஜ் … Read more

ஸ்வீடனில் முதியோர்களுக்கு 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…!

ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவா் ஆண்டா் டெக்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  80 வயதுக்கு மேற்பட்டவா்கள், முதியோா் பராமரிப்பு மையங்களில் இருப்பவா்கள் மற்றும் வீடுகளிலேயே மருத்துவப் பராமரிப்பில் இருப்போருக்கு 4-ஆவது தவணை செலுத்துவது கொரோனாவிடமிருந்து அவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை திறப்பு மாநில அரசு அறிவிப்பு

பெங்களூரு,  உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் கடந்த 8-ந் தேதி போராட்டம் நடத்தினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டு மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர … Read more

விராட் கோலியின் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை – பேட்டிங் பயிற்சியாளர் ரதோர் பேட்டி

கொல்கத்தா, இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை. அவர் நன்றாக ஆடுகிறார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ரதோர் கூறினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ெவஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (இரவு 7.30 மணி) நடக்கிறது. இதையொட்டி இந்திய … Read more

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

ஒமைக்ரான் வகை கொரோனாவால் அங்கு புதிதாக அந்த நோய் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மட்டும் 1,347 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் திணறுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து முதல்-மந்திரி மீண்டும் வலியுறுத்தல்

பாட்னா,  பாட்னாவில் உள்ள தலைமைச்செயலகத்தில், கொரோனா காரணமாக ஒரு மாத இடைவெளிக்குப் பின் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி நிதிஷ்குமார், ‘பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 2005-ம் ஆண்டு முதல், எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான வளங்களைக் கொண்டு மாநிலத்தை முன்னேற்ற முழு முயற்சி செய்கிறோம்.  பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளபோதிலும், பல மேம்பாட்டு குறியீடுகளில் இன்னும் தேசிய சராசரியைவிட பீகார் பின்தங்கியே இருக்கிறது. … Read more

புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ், உ.பி. யோத்தா அணிகள் வெற்றி..!

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இதுவரை 19 ஆட்டங்களில் ஆடியுள்ள பாட்னா அணி 14 வெற்றி, ஒரு டை, 4 தோல்வி என்று 75 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன், … Read more

48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கு, உக்ரைன் `கெடு'

1 லட்சம் படை வீரர்கள் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த … Read more