ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெளியேற்றம்

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.  கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் … Read more

பெண்களுக்கான நீச்சல் போட்டி: ஆதிக்கம் செலுத்திய மூன்றாம் பாலினத்தவர்கள்

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் 2022 இவி லீக் பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இந்நிலையில், பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர்களான (திருநங்கைகள்) ஐசக் ஹிங்க் மற்றும் லியா தாமஸ் ஆகிய இருவரும் பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆணாக பிறந்த லியா தாமஸ் 2019-ம் ஆண்டு பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். … Read more

குஜராத்: விற்பனையில் களைகட்டும் 'புஷ்பா' டிசைன் சேலை..!

காந்தி நகர், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடி்த்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது அந்த … Read more

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெற்றி தொடருகிறது

இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. முதல் 3 போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட ஆஸ்திரேலிய அணி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளை … Read more

உக்ரைன் தலைநகரை ரஷியா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்- ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உக்ரைன் விவகாரத்தில் ரஷியா, உக்ரைன் மீது படையெடுப்பதற்காக  தவறான தகவல்களை அளித்துள்ளது. மேலும் தவறான தகவல்கள் ரஷ்ய மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.   ரஷியாவின் 40 சதவீத ராணுவ படைகள் தாக்குதல் நடத்த ஏதுவாக உக்ரைன் எல்லையில் முகாமிட்டுள்ளன. கடந்த வாரம் சில படைகளை ரஷியா பின் வாங்கியிருந்தாலும் இப்போதும் அங்கு 1,50,000 படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. … Read more

இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 30 ஆயிரத்து 757 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 30 ஆயிரத்து 615- ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 80 … Read more

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி அட்டவணை வெளியீடு..!

லொசன்னே, பெண்களுக்கான 15-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.  இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளம் நேற்று வெளியிட்டது. இந்திய அணி ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து, சீனா அணிகளும் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 3-ந்தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது.  இது குறித்து இந்திய … Read more

கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்..!

ஒட்டாவா, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். அதன்பின்னர், அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் … Read more

இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் இறப்பா..? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி,  இந்தியாவில் கடந்த நவம்பர் வரையில் 37 லட்சம் பேர் வரையில் கொரோனாவால் இறந்திருக்கக்கூடும் என்ற ஆய்வுத்தகவல் அடிப்படையிலான ஊடக அறிக்கைகளை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம்பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை மறுக்கும் விதத்தில் … Read more

புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தியது டெல்லி..!

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரட்ஸ் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 26-23 என்ற புள்ளி கணக்கில் பாட்டா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 11 வது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் பாட்னா பைரட்ஸ் 81 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தபாங் டெல்லி … Read more