புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தியது டெல்லி..!

பெங்களூரு, 
8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரட்ஸ் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 26-23 என்ற புள்ளி கணக்கில் பாட்டா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 11 வது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் பாட்னா பைரட்ஸ் 81 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தபாங் டெல்லி அணி 70 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8.30 மணி), தமிழ் தலைவாஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.