பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் அளிக்கப்பட்ட மனுவில், “முதுநிலை ஆசிரியர்களின் பணபலன் சார்ந்த தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துரு தயாரித்தல் மற்றும் அதுசார்ந்த அமைச்சுப்பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது. அவ்வாறு அந்த ஆசிரியர்கள் செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது. இந்த மன உளைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்களை கூடுதல் பணியாக அமைச்சுப்பணிகளையும் மேற்கொண்டு தங்களுக்குரிய பணபலன்களை பெறும் அவலநிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் … Read more

ராஜஸ்தான் கேப்டன் சாம்சனுக்கு அபராதம்…காரணம் என்ன?

புதுடெல்லி, நேற்று டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டியில் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 222 ரன் … Read more

அப்பாவுக்கு குட்பை சொல்லு… 3 வயது மகனை கொன்று, தாய் தற்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32). இவருடைய மகன் கெய்தன் (வயது 3). இந்நிலையில், சான் ஆன்டனியோ பகுதியில் உள்ள பூங்காவுக்கு மகனுடன் சென்ற அவர் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. கிரிகரின் முன்னாள் கணவர் மீது அவர் கோபத்தில் இருந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு … Read more

அம்பானி-அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு கருப்பு பணம் வாங்கினார்? பிரதமர் மோடி கேள்வி

ஐதராபாத்: தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். ராகுல் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியின் இளவரசர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, ‘ஐந்து தொழிலதிபர்கள்’ என்று முழக்கமிட்டதை நீங்கள் (மக்கள்) பார்த்திருப்பீர்கள். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை தவறாக பேசுவதை அவர் நிறுத்திவிட்டார். இந்த தேர்தலில் அம்பானி-அதானியிடம் இருந்து அவர் எவ்வளவு பணம் வாங்கினார்? எவ்வளவு … Read more

200 ரன்கள் அடிக்கும் போட்டிகளில் பவுலர்கள் மீது அழுத்தம் இருக்கும் அதே சமயம்… – குல்தீப் யாதவ் பேட்டி

டெல்லி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான … Read more

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா

வாஷிங்டன், சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 68 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கின. அவற்றில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி நல்ல பலன் தந்தது. அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய இந்த … Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி – அதிர்ச்சி சம்பவம்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரதமேஷ் போக்சே என்பவர் கடந்த 3ம் தேதி சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார். அடுத்த நாள் அவருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமேஷ் அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் … Read more

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்; கடைசி இரு போட்டிகளுக்கான வங்காளதேச அணி அறிவிப்பு

டாக்கா, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி இரு டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ … Read more

இஸ்ரேல்; போதை பொருள் கடத்தல் தலைவர்கள் 26 பேர் கைது

டெல் அவிவ், இஸ்ரேல் நாட்டின் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த நகரம் இலாத். இந்த நகரில் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து நடந்த அதிரடி நடவடிக்கையின் தொடர்ச்சியாக, போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் போலீசார் கூறும்போது, 10 மாதங்களாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன்படி, ஆபத்துக்குரிய போதை பொருட்களை கடத்தி, வினியோகம் செய்பவர்கள் … Read more

காட்டு யானை தாக்கி கேமராமேன் பலி

திருவனந்தபுரம், கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல செய்தி சேனலில் முகேஷ் (வயது 34) கேமராமேனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பாலக்காடு மாவட்டம் கோட்டிகட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகளை புகைப்படம் எடுக்க சென்றிருந்தார். அப்பகுதியில் உள்ள ஆற்றின் அருகே யானைகள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அதை முகேஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த காட்டு யானை முகேஷை சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் முகேஷ் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை மீட்ட சக ஊழியர்கள், … Read more