புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?- டிம்பிள் யாதவ் கேள்வி

லக்னோ, புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மங்கள்சூத்ரா’ கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:- புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த … Read more

அதிரடியில் மிரட்டிய ரிஷப் பண்ட் , அக்சர் படேல்…டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு

புதுடெல்லி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேக் மெக்கர்க் … Read more

அமெரிக்கா: சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆற்றங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினத்தந்தி Related … Read more

சத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தன்டேவாடா, சத்தீஷ்காரில் தன்டேவாடா பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட்டுகளில் சிலர் இன்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் முன் நேரில் சரணடைந்தனர். இவர்களில் எச்.பி.எம்.பி. என்ற பிரிவை சேர்ந்த தளபதி ஹித்ம ஓயம் (வயது 34), 3 பெண் நக்சலைட்டுகளான சம்பதி ஓயம் (வயது 23), கங்கி மத்கம் (வயது 28) மற்றும் ஹங்கி ஓயம் (வயது 20) உள்பட 18 பேர் அடங்குவர். இவர்கள் தெற்கு பஸ்டார் நகருக்கு உட்பட்ட பைரம்கார் … Read more

டி20 உலகக்கோப்பை: அவருக்கான விசா மற்றும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன் – சேவாக்

புதுடெல்லி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக 2020-ல் நடைபெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக 2023 சீசனில் அதிவேகமான அரை சதமடித்து சாதனை படைத்த அவர் … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்

நியூயார்க்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. எனினும், ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இதனால் காசாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் … Read more

கேரளா: தேர்தல் பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கடும் மோதல்; எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் காயம்

மலப்புரம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் … Read more

ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்….ஷிவம் துபே அரைசதம் : சென்னை அணி 210 ரன்கள் குவிப்பு

சென்னை, 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் , ரகானே ஆகியோர் களமிறங்கினர். … Read more

பலமுறை எச்சரித்தும்… எரிமலை முன் புகைப்படம்; தவறி விழுந்து இளம்பெண் பலி

ஜாவா, சீனாவை சேர்ந்த தம்பதி ஹுவாங் லிஹோங் (வயது 31) மற்றும் அவருடைய கணவர் ஜாங் யாங். இவர்கள் இருவரும் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஜென் என்ற எரிமலை பகுதிக்கு சென்றனர். இது பார்ப்பதற்கு நீல வண்ணத்தில் காட்சி தரும். அதில், ஈர்க்கப்பட்டு இந்த தம்பதி எரிமலை அருகே சென்றது. அப்போது, லிஹோங் புகைப்படம் ஒன்றை எடுக்க விரும்பியுள்ளார். அப்போது, அவர் திடீரென தவறி மலையின் 246 அடி ஆழ … Read more

10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு…? யு.ஜி.சி. எச்சரிக்கை

புதுடெல்லி, நாடு முழுவதும் ஆன்லைன் வழியே கல்வி பயில்வது மாணவ மாணவிகளிடையே அதிகரித்து உள்ளது. இதில் சில நன்மைகளும் உள்ளன. எனினும், போலியான பெயரில் ஆன்லைன் படிப்புகள் வெளியிடப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) எச்சரித்து உள்ளது. இதுபற்றி யு.ஜி.சி.யின் செயலாளர் மணீஷ் ஜோஷி கூறும்போது, சில தனிநபர்கள் அல்லது அமைப்புகள் ஆன்லைன் வழி படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களை வழங்குகின்றனர். அவை, உயர் கல்வி நிறுவனங்களின் … Read more