பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் – பதற்றம்

தெஹ்ரான், ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு படை உள்ளது. இந்த குவாட்ஸ் பிரிவு வெளிநாடுகளில் உளவு, ரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஈரான் புரட்சிப்படையின் தளபதி குவாசம் சுலைமானி கடந்த 2020ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் … Read more

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி, நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப்,உத்தரபிரதேசம்,அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு … Read more

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை… 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!

கொழும்பு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று … Read more

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை: தீக்கிரையான வீடுகள்…!

ரெய்க்யவிக், ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறியது. அது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேவேளை, லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் … Read more

வடமாநிலங்களில் பனி மூட்டம் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி, நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது. கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லி, பஞ்சாப்,உத்தரபிரதேசம்,அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. கடும் பனி மூட்டத்தால் அதிகாலை நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்துடன் நெருப்பு … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றுடன் வெளியேறிய ஆண்டி முர்ரே

மெல்போர்ன், டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ள இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து முன்னணி வீரர் … Read more

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

சனா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் … Read more

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது. ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சனைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Had … Read more

புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்..!

ஜெய்ப்பூர், 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் … Read more

பிரேசிலில் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி

பிரசிலியா, தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் … Read more