மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோ மான்டீரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். தினத்தந்தி … Read more

கம்போடியா ராணுவ தளத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்து: 20 வீரர்கள் பலி

நாம் பென், கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக … Read more

ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற கனவை நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி

பனாஜி, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, கோவாவில் மொத்தமுள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஜானிக் சினெர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி), சக நாட்டவரான லோரென்சோ சோங்கோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சினெர் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ சோங்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags … Read more

முன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை – இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி

லண்டன், கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சோனா (வயது 23). இவர் 2017ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்றார். அப்போது அதே கல்லூரியில் படித்த ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லாவும் (வயது 23) சோனாவும் காதலித்து வந்தனர். பின்னர், இருவரும் மேல்படிப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து சென்றனர். கிழக்கு லண்டனில் உள்ள கல்லூரியில் இருவரும் மேற்படிப்பு படித்தனர். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே சோனா கிழக்கு லண்டனில் உள்ள ஐதராபாத் வாலா என்ற உணவகத்தில் பகுதிநேரமாக … Read more

கர்நாடகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் 29-ந்தேதி மறுவாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(26-ந்தேதி) நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு வரும் மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று கர்நாடகாவின் சம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட ஹானூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவின்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. முன்னதாக அங்குள்ள இண்டிகானத்தா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் … Read more

மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும் – ஹர்திக் பாண்ட்யா

டெல்லி, ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய – டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற … Read more

செங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் – அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் செங்கடல் வழியாக சென்ற ‘ஆண்ட்ரோமேடா ஸ்டார்’ என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரேயா அறிவித்தார். இந்த … Read more

பா.ஜ.க. ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது ; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

அகமதாபாத், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் … Read more

பிரப்சிம்ரன், பேர்ஸ்டோ, ஷசாந்த் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றி

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா தொடக்க வீரர்களாக பில் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71 ரன்களில் அவுட் ஆனார். சால்ட் 75 ரன்களில் … Read more