ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா பதில்

நியூயார்க், உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நிலையில்,உக்ரைன் விவகாரம் … Read more

‘சில் திதி சில்’- மணமகன் கொடுத்த பர்பியை கோபத்தில் தூக்கி எறிந்த மணமகள் – வைரலாகும் வீடியோ…!

மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கையில் திருமண நாள் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு மணமகள் தனது திருமண நாளை தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக நினைக்கவில்லை. சமூக வலைதளத்தில் ‘சில் திதி சில்’ என்ற இந்த வேடிக்கையான வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மணமகள் சிவப்பு நிற லெகங்காவும், மணமகன் சூட்டும் அணிந்துள்ளனர். திருமண விழா முடிந்ததும் இருவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு ஒரு மேடையில் … Read more

“சாஹாவின் கருத்து என்னை காயப்படுத்தவில்லை" – ராகுல் டிராவிட்

மும்பை, இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். அணியில் தேர்வு செய்யப்படாததற்கு ராகுல் டிராவிட்டை குற்றம்சாட்டினார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார் என்று சாஹா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிராவிட் பேசியுள்ளார். “விருத்திமான் சாஹாவின் கருத்துகளால் காயமடையவில்லை, அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர்” என்று இந்திய … Read more

உக்ரைன் விவகாரத்தில் திடீர் திருப்பம்; விரைவில் ரஷிய அதிபர் புதின் – ஜோ பைடன் சந்திப்பு!

வாஷிங்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன.  உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது. இப்போதைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய … Read more

ஒடிசா: காட்டு யானையிடம் இருந்து கிராம மக்களை காப்பாற்றிய வனக்காவலர் குவியும் பாராட்டு…!

ஒடிசா, ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று  ஒற்றை யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அப்பகுதியில் உள்ள பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியது. அப்போது வனக் காவலர் சித்த ரஞ்சன் மிரி அந்த இடத்தை அடைந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தார், அவருடன் இருந்த அனைவரும் ஓடிவிட்டாலும், ரஞ்சன் தனி ஒரு ஆளாக நின்று, யானையை விரட்டுவதில் மட்டும் கவனம் … Read more

ஐசிசி டி20 தரவரிசை: 6 ஆண்டுக்கு பிறகு “முதல் இடத்தில்” இந்தியா…!!

துபாய்,  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும். முன்னதாக ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் … Read more

ராசல் கைமா ஜெபல் ஜைஸ் மலைப்பகுதியில் பழங்கால கார்களின் அணிவகுப்பு

ராசல் கைமா,  அமீரகத்தில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் அந்த கார்கள், ராசல் கைமாவில் உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி வழியாக வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பழங்கால கார்களின் அணிவகுப்பு இத்தாலி நாட்டில் பிரபலமான ‘1,000 மிக்லியா’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்கள் சேகரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தாலியில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் 1,600 கி.மீ தொலைவுக்கு பிரசியா … Read more

இளம் தலைமுறையை மேம்படுத்தினால் இந்தியாவின் எதிர்காலம் மேம்பாடு அடையும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி,  மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து  இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:- நமது இளம் தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம் தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும். 2022 யூனியன் பட்ஜெட்டில் கல்வித்துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  *முதலாவதாக, தரமான … Read more

சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விர்தி குமாரிக்கு பாராட்டு விழா!

சென்னை, அபுதாபியில் சமீபத்தில் நடந்த ‘கலப்பு மார்சியல் ஆர்ட்ஸ்’ என்ற சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் இந்திய வீராங்கனை விர்தி குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.  அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். விர்தி குமாரியை வாழ்த்தி பேசிய கனிமொழி கூறியதாவது, “விர்தி குமாரி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று வாழ்த்தினார். … Read more

விற்பனையில் களைகட்டும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாசனை திரவியம்..!

இதாகோ, அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ் (French Fries) நறுமணம் கொண்ட வாசனை திரவியம் (Perfume) ஒன்றை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவின் இதாகோ மாகாணத்தில் உள்ள ‘தி இதாகோ பொட்டேட்டோ கமிஷன்’ என்ற நிறுவனம் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அந்த நிறுவனம், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டுள்ளதாக … Read more