அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டம்; பல்கலைகழகம் முடிவு

சியாட்டில், அமெரிக்காவின் நார்த்ஈஸ்ட் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவி ஜானவி கண்டுலா (வயது 23). ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து படிப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் தெரு ஒன்றை கடந்து செல்லும்போது, சியாட்டில் நகர போலீஸ் வாகனம் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், அந்த பல்கலை கழகத்தின் வேந்தர் கென்னத் ஹென்டர்சன் கூறும்போது, கண்டுலா மறைவை அடுத்து, அவருக்கு பட்டமளிக்க … Read more

நிபா வைரஸ் பரவல்: மாஹே பிராந்தியத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி அரசு

மாஹே, கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லை பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு … Read more

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; முன்னணி வீரர் காயம் – இலங்கைக்கு வந்த சிக்கல்…!

கொழும்பு, ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து … Read more

கனடா வர்த்தகத்துறை மந்திரியின் இந்திய பயணம் ஒத்திவைப்பு – இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல்

ஒட்டோவா, டெல்லியில் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவும் வந்திருந்தார். ஆனால், அவர் 10ம் தேதி நடந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை. அதேவேளை, ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் … Read more

கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்கான 'விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, பாரம்பரிய கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்காக ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த மாதம் டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்டார். இந்த திட்டத்தை விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் பிறந்த தினமும் நாளை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நிதி ரீதியாக உதவுவது … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-மொராக்கோ இடையிலான ஆட்டம் இன்று தொடக்கம்

லக்னோ, டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா-மொராக்கோ அணிகள் மோதும் ஆட்டம் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இந்த குலுக்கல் நிகழ்ச்சியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன்படி முதல் நாளான இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதலாவது ஆட்டத்தில் உலக தரவரிசையில் 365-வது … Read more

சட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை

ஹவானா, உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை செயல்படுகின்றன. இந்தநிலையில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது … Read more

நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவின் கோழிக்கோட்டில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோழிக்கோடு, கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை 6 பேருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1080 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு … Read more

ஒருநாள் கிரிக்கெட்: அதிக முறை 400 ரன்கள் – இந்தியாவின் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்கா…!

செஞ்சூரியன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து … Read more

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் – இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி

வாஷிங்டன், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பல முனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் உள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்குகுடியரசு கட்சியினரின் ஆதரவை பெற தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த விவேக் ராமசாமி, தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களை … Read more