பாஜகவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும் – ராகுல் காந்தி

மும்பை, இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது, இன்று, இரண்டு பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் உள்ள கட்சிகள் … Read more

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆண் குழந்தை…!!

புது டெல்லி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி முன்னாள் கால்பந்து வீரர் சுப்ரதா பட்டாச்சார்யாவின் மகள் சோனம் பட்டாச்சார்யாவை நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனம் கர்ப்பமாக இருப்பதை சேத்ரி கடந்த ஜூன் மாதம் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் விளையாடும் போது அறிவித்திருந்தார். அதில் நடந்த ஒரு போட்டியில் சேத்ரி கோல் அடித்த பிறகு பந்தை எடுத்து சட்டைக்கு அடியில் வயிற்று பகுதியில் வைத்துக்கொண்டு … Read more

குடிக்காதீங்க… இளம்பெண் பலாத்கார விவகாரத்தில் இத்தாலி பிரதமரின் கணவர் சர்ச்சை பேச்சு

ரோம், இத்தாலியின் பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஆண்டிரியா கியாம்புருனோ. இவர் தொலைக்காட்சியில், டெய்லி டைரி என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில், அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிசிலி நகரில் பாலர்மோ பகுதியில் இளம்பெண் ஒருவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டது அந்நாட்டினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கியாம்புருனோ அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் நடனம் … Read more

பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மும்பை, இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி … Read more

இந்தியாவில் கிடைக்காத வாய்ப்பு….இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாட தேர்வான சாய் சுதர்சன்…!

லண்டன், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார். இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான … Read more

இங்கிலாந்து பிரதமரின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி

லண்டன், இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான (Energy Security and Net Zero) செயலாளராக இருந்த கிராண்ட் சாப்ஸ் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கிளேர் கோடின்ஹோ(38), தற்போது இங்கிலாந்தின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷியா-உக்ரைன் … Read more

நடைபயணத்தை முதற்கட்டமாக முடித்துள்ள அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல்

புதுடெல்லி, ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூலை 28-ந்தேதி) நடைபயணம் தொடங்கினார். தமிழகத்தின் தென் பகுதியில் என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், நடைபயணத்தை அண்ணாமலை முதற்கட்டமாக முடித்துள்ளார். இதற்காக அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடைபயணத்தை முதற்கட்டமாக முடித்துள்ள அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக … Read more

முதல் போட்டியில் வெற்றி..! இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு தயராக உதவியாக இருந்தது – பாபர் அசாம்

பல்லகெலே, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி … Read more

ஏலத்திற்கு வரும் டயானாவின் கவுன்கள்!

நியூயார்க், மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்படுகின்றன. அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானா உடுத்திய கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன. 1997-ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார். அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த … Read more

செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி, செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் தான் முடிந்த நிலையில் தற்போது சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி … Read more