டுவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாகி நியமனம்..!! எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் … Read more

10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டீசல் கார்களுக்கு தடையா? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை ஆக்சைடை வெளியிடும் நாடுகளில் உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்பன்-டை ஆக்சைடு வெளியிடுவதை 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்யம் ஆக்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் குறித்து சிபாரிசு செய்வதற்காக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் எரிசக்தி மாறுதல் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது சிபாரிசுகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. டீசல் காருக்கு தடை எரிசக்தி மாறுதல் குழுவின் முக்கிய சிபாரிசுகள் … Read more

பிரிஜ் பூஷனை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள்

புதுடெல்லி, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் … Read more

இஸ்ரேல் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு: 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலம் நடந்து வரும் நிலையில் சமீப காலமாக அது தீவிரம் அடைந்து வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதியான மேற்குகரை நகரத்தில் பாலஸ்தீன ஆயுத போராளிகள் பலர் பதுங்கி இருப்பதால் அவர்களை களையும் நடவடிக்கையாக கருதி ஒரு வருடமாக அங்கு இஸ்ரேல் ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது. இதனால் அடிக்கடி அங்கு மோதல் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசா நகரத்தில் உள்ள ஹமாஸ் … Read more

'ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்' – பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் முதல்-மந்திரி பேச்சு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடம் உண்டு. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. நாட்டில் எல்லா மதத்தினர், சாதியினர் இடையேயும் அன்பும், சகோதரத்துவமும் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். இந்த … Read more

கோத்தகிரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி

நீலகிரி கோத்தகிரி கோத்தகிரி காந்தி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் கோடைகால பள்ளி விடுமுறை நேரத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு இலவசமாக பயிற்சி முகாம் நடத்தப்பட்டு அதில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயிற்சி முகாம் கடந்த 8 ஆம் தேதி துவங்கியது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த சுமார் 80 சிறுவர், சிறுமிகள் … Read more

ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான எக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே … Read more

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தல் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம் தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப்பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு … Read more

உலக குத்துச்சண்டை போட்டியில் தீபக், ஹூசாமுதீன், நிஷாந்த் அரைஇறுதிக்கு முன்னேற்றம் – 3 பதக்கத்தை உறுதி செய்து அசத்தல்

தாஷ்கென்ட், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் தீபக் போரியா, கிர்கிஸ்தானின் நூர்ஜித் துஷ்பாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக் போரியா 5-0 என்ற கணக்கில் நூர்ஜித்தை துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் மற்றொரு இந்திய வீரரான முகமது ஹூசாமுதீன் கடும் சவாலான மோதலில் 4-3 என்ற … Read more

மெக்சிகோவில் கொரோனா அவசர நிலை முடிவு

மெக்சிகோ சிட்டி, கொரோனா வைரஸ் கடந்த 2019-ல் சீனாவில் கண்டறியப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மெக்சிகோ நாட்டில் கொரோனா அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் உள்ள 95 சதவீதம் மக்கள் கொரோனாவுக்கு … Read more