பவர்-பிளேயில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டோம் – தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி பேட்டி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்கள் (43 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்தார். அடுத்து ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்னில் அடங்கி … Read more

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஓவ்கடோக், மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க ராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். இந்த ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே … Read more

ஏழைகளின் போராட்டம், வலியை காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது: பிரதமர் மோடி

புதுடெல்லி, கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பேரணி, கட்சி பொது கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் பிதார் மாவட்டத்தில் ஹம்னாபாத் நகரில் நடந்த பொது கூட்டத்தில் பா.ஜ.க. சார்பிலான தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின்போது, ஏழைகளின் … Read more

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : பி.வி. சிந்து காலிறுதி சுற்றில் தோல்வி..!

துபாய், துபாயில் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் கடந்த 25-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்று வருகின்றன.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தென் கொரியாவின் அன் சே யங் விளையாடினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை கைப்பற்றிய சிந்து ,பின்னர் 2 செட்களை தவற விட்டார். இதனால் 21-18, 5-21, 9-21 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.இதனால் அவர் ஆசிய … Read more

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இது தொடர்பான வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய கோரி பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை … Read more

டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மு.க ஸ்டாலின் சந்திப்பு

புதுடெல்லி, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். இதற்காக டெல்லி சென்று இருந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், ஜனாதிபதியை சந்தித்த பிறகு, டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் … Read more

500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற 3வது அணி என்ற பெருமையை பெற்றது பாகிஸ்தான் அணி!

ராவல்பிண்டி, நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தான் 48.3 … Read more

65 வயது மச்சாக்கார மேயர்…! 16 குழந்தைகள் இருந்த போதும் 16 வயது அழகியை 7வதாக திருமணம் செய்தார்

பிரேசிலின் பரானா மாகாணத்தின் அரவுகாரியா நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி (65) கடந்த மாதம் 16 வயதுடைய காவான் ரோட் காமர்கோ என்ற சிறுமியை பெண் திருமணம் செய்து கொண்டார். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனிக்கு இது 7வது திருமணமாகும், இதற்கு முன்னதாக 6 திருமணம் நடைபெற்று உள்ளது. அவருக்கு 1980ல் முதல் திருமணம் நடைபெற்றது. 6 திருமணங்களில் மேயர் ஹிசாம் ஹூசைனுக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி திருமணம் … Read more

அவதூறு வழக்கு – ராகுல் காந்தியின் மனு நாளை குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி, பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி அவர்கள், தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் … Read more

ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா லக்னோ? – இன்று மோதல்

மொகாலி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் மும்பையை 13 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் பஞ்சாப் வீரர்கள், கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். தோள்பட்டை … Read more