எங்களை கிண்டல் செய்ய காரணம் இதுதான்..திருமண சர்ச்சை குறித்து ஓபனா பேசிய ரவீந்தர், மகாலட்சுமி!

சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் வி ஜே மகாலட்சுமி. விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த மகாலட்சுமி தற்போது நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவர்களுடைய திருமணம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வரட்டும். என எதைபற்றியும் கவலைப்படாமல் அந்த ஜோடி ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரிப்பாளர் … Read more

நடிகை மீனா சொன்ன பொய்.. கண்கலங்கிய கலா மாஸ்டர்.. என்னதாங்க நடந்துச்சு!

சென்னை : நடிகை மீனா மற்றும் கொரியோகிராபர் கலா மாஸ்டர் இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக கோலிவுட்டில் இருந்து வருகின்றனர். மீனா சமீபத்தில் தன்னுடைய கணவரை இழந்தபோது அவருடன் சில தினங்கள் கூடவே இருந்து கலா மாஸ்டர் அவரை தேற்றிவிட்டுதான் வீடு திரும்பினார். தொடர்ந்து மீனாவின் சுக துக்கங்களில் பெருமளவில் பங்கெடுத்து வருகிறார் கலா மாஸ்டர். மீனா -கலா மாஸ்டர் நட்பு நடிகை மீனா மற்றும் கொரியோகிராபர் கலா மாஸ்டர் இருவரும் கோலிவுட்டில் மிக நெருங்கிய தோழிகளாக … Read more

லைகர் படத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. கடுப்பான நடிகை சார்மி.. இப்படியொரு முடிவை எடுத்துட்டாரே!

ஹைதராபாத்: தெலுங்கு – இந்தி பைலிங்குவலாக பெரும் பொருட்செலவில் உருவான விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவை தாண்டி நெட்டிசன்கள் பலரும் அந்த படத்தை தயாரித்த நடிகை சார்மியை பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளனர். இதனால் கடுப்பான நடிகை சார்மி சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வதாக பரபரப்பு ட்வீட் போட்டுள்ளார். தயாரிப்பாளரான சார்மி சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக … Read more

உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் படைப்பாளி.. வெற்றி மாறனுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன சூரி!

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களில் இவருக்கும் சிறப்பான இடம் உண்டு. இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார். பொல்லாதவன் என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இவர்தான் வட சென்னை உள்ளிட்ட அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களையும் கொடுத்துள்ளார். ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற … Read more

வெற்றிமாறன் பிறந்தநாள்… அழகாக வாழ்த்திய சூரி… சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை படக்குழு…

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வெற்றிமாறன் பிறந்தநாளுக்கு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அழகாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 47வது வயதில் வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ மூலம் அறிமுகமான வெற்றிமாறனுக்கு இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. 15 ஆண்டுகால திரைப் பயணத்தில் விடுதலை உட்பட 7 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் … Read more

கையை அங்க வச்சு..அசத்தலாக அன்பைச் சொன்ன லாஸ்லியா..என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா!

சென்னை : நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான போட்டோவை பகிர்ந்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற … Read more

வெற்றிமாறன் பிறந்தநாள்.. வாடிவாசல் தீமில் வந்த கேக்.. விடுதலை இயக்குநரின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் வெற்றிமாறனின் பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கடலூரில் பிறந்த வெற்றிமாறன் இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர். விடுதலை படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் வெற்றிமாறனுக்கு வாடிவாசல் தீம் கேக்கை ரசிகர்கள் கொடுத்து திக்குமுக்காட செய்து விட்டனர். வெற்றிமாறன் பிறந்தநாள் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். சாதாரண பல்சர் … Read more

சுந்தர சோழர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன்: பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்ட அடுத்த அப்டேட்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வரும் 6ம் தேதி பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? மணிரத்னம் இயக்கியுள்ளா ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், அதிகமான பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம், செப்டம்பர் 30ம்தேதி உலகம் முழுவதும் … Read more

எமி ஜாக்சன் ரிட்டர்ன்ஸ்.. ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்கப்போறாரா.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: தொழிலதிபர் ஜார்ஜ் உடன் நிச்சயம் செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்த எமி ஜாக்சன் சினிமாவிலிருந்து அதிரடியாக விலகினார். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் மீண்டும் கோலிவுட்டில் ஏ.எல். விஜய் இயக்கத்திலேயே என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்ஜுடன் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன் அவரை சமீபத்தில் பிரிந்து விட்டு இன்னொரு நடிகருடன் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவள் வந்துவிட்டாள் இயக்குநர் … Read more

வெந்து தணிந்தது காடு படத்துக்கு முதல் நாளில் இவ்வளவு கலெக்ஷன் வருமா.. சூப்பரான கணிப்பா இருக்கே!

சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்திற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார் சிம்பு. இதையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிகர் சிம்பு தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பல சர்ச்சைகளில் சிக்கி, தன்னுடைய சினிமா கேரியரை சிக்கலாக்கிக் கொண்டிருந்த சிம்பு … Read more