நான் கஷ்டப்பட்டு பண்றத ரஜினி அசால்டா பண்ணிடுவாரு…ரஜினியை ஓப்பனாக பாராட்டிய கமல்

சென்னை : ரஜினி – கமலை போட்டியாக ரசிகர்கள் நினைத்து வருவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனாலும் அவர்கள் நல்ல நண்பர்கள் என்பதை பலமுறை மேடைகளிலும், பேட்டிகளிலும், சோஷியல் மீடியாவிலும் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் ரசிகர்கள் இடையேயான போட்டி பல ஆண்டுகள் ஆன பிறகும் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட சமயத்தில் கமலிடம் எடுக்கப்பட்ட பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக … Read more

பா.ரஞ்சித் படத்திற்கு ‘A’ சான்றிதழ்..அப்படி என்ன படத்தைய்யா எடுத்து வெச்சியிருக்காரு?

சென்னை : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சென்சார்போடு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. தமிழ் சினிமா மீடியாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை … Read more

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ரெண்டாவது ட்ரீட்: ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ செகண்ட் சீசன் கன்ஃபார்ம்

லண்டன்: உலகளவில் ஹாலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’ HBO தொலைக்காட்சியில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஒளிப்பரப்பான கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. கேம் ஆஃப் த்ரோன்ஸின் முந்தைய கதையை விவரிக்கும் விதமாக தற்போது ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடர் வெளியாகி வருகிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் அறிமுகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர், … Read more

அட சூரி அறிமுகமானது இந்த படத்திலா? 12 ஆண்டு போராட்டம் பரோட்டா சூரி ஆன கதை

சென்னை : நடிகர் சூரி தனது 20 வது வயதில் நடிக்க வந்துவிட்டார். ஆனால் அவரை எல்லோரும் பரோட்டா சூரியாக பிரபலமானவுடன் தான் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். சினிமா ஆசையால் வரவில்லை வறுமை காரணமாக வேலைத்தேடி சென்னை வந்தவர் பின்னர் சினிமா வாய்ப்புக்காக அலைந்து சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானார். சினிமாவில் இவருக்கு நெருங்கிய நண்பராக சிவகார்த்திகேயன், விஷால் போன்றோர் உள்ளனர். பரோட்டா காமெடியில் பிரபலமான சூரி சினிமாவில் யதார்த்த நடிப்புக்கு பெயர் போனவர் நடிகர் வடிவேலு. என் … Read more

நலமாக இருக்கிறேன்.. விரைவில் சந்திப்போம்..அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா உடல்நலத்துடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா, தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதை அடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து குடும்பத்தினர் … Read more

திருச்சிற்றம்பலம் பெஸ்டி கேரக்டர் நாயகி கோலிவுட்டில் ரீ என்ட்ரி: இந்த முறை ஏஞ்சல் இல்லையாம்

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா, நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காமல் இருந்து வருகிறார். விஜய்யுடன் பத்ரி படத்தில் பெஸ்டியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் பூமிகா. இந்நிலையில், பூமிகா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெஸ்டிகளின் முன்னோடி தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் தனுஷின் பெஸ்டியாக நடித்துள்ள நித்யா மேனனின் ஷோபனா கேரக்டரை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் … Read more

'வாரிசு'ஷுட்டிங்கில் அசிங்கப்பட்டேன்…நொந்துபோய் பேட்டியளித்த பிரபல சீரியல் நடிகர்

சென்னை : ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பிற்கு வர சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என பிரபல நடிகர் ஒருவர் நொந்துபோய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஐதராபாத் என பல இடங்களில் ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. குடும்ப பொழுதுபோக்கு, ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து … Read more

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்திற்கு என்ன பெயர் தெரியுமா? அட இதுவும் நல்லாத்தான் இருக்கு !

சென்னை : விஜய் சேதுபதி- பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். விஜய்சேதுபதி விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளீர், மைக்கேல், … Read more

'பொன்னியின் செல்வன்' ரன்னிங் டைம் இவ்வளவா?…ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய அப்டேட்

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் சினிமாவாக உருவாக்கப்பட்டு உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இந்திய திரையுலகின் பிரபல நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக … Read more

ஆன்ட்டி என கூப்பிட்டதால் டென்ஷனான நடிகை…போலீசில் புகார் அளிப்பதாக எச்சரிக்கை

ஐதராபாத் : ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்வேன் என்று ஆன்லைன் ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ளார் நடிகை அனசுயா பரத்வாஜ். தெலுங்கு சினிமா மற்றும் டிவிக்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை அனசுயா பரத்வாஜ், சர்ச்சை பேச்சுக்களால் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார். கில்லாடி உள்ளிட்ட பல பிரபலமான படங்களிலும் … Read more