“திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை” – தினகரன் கருத்து 

தஞ்சாவூர்: “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் ‌ பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனுார் கற்பகாம்பாள் உடனாய அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் கோயிலில், … Read more

பெங்களூருவில் 5 மாதங்களுக்குப் பிறகு மழை: கடும் வெயிலில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சி!

பெங்களூரு: 5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது. கடைசியாக நவம்பர் 23 அன்று பெங்களூருவில் மழை பதிவானது. அதன் பின்னர் அந்நகரம் வறண்ட வானிலையைதான் கண்டு வந்தது. தற்போது அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். இந்தியாவின் தோட்டநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அதாவது, பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் இருந்து வந்த நிலையில், அப்பகுதி மக்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில், 5 … Read more

விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு: பேராசிரியர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியது: ”சோழ மன்னன் சுந்தர சோழனின் மகனும் புகழ்பெற்ற சோழ மன்னன் ராஜராஜனின் மகனுமான ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்து … Read more

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை, “மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி … Read more

17 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மலை – சென்னை ரயில் சேவை: மலர் தூவி வழியனுப்பி வைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. விழுப்புரம் – காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. இப்பணியை தொடங்குவதற்கு முன்பாக, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை – தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நிறுத்தப்பட்டன. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, நிறுத்தப்பட்ட … Read more

“அமேதி, ரேபரேலி காங். வேட்பாளர்கள் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம்” – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் நிறைய பேர் நிறைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதி. தேர்ந்த செஸ் வீரரும் கூட. கட்சி இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு பெரிய அரசியல் உத்தியை … Read more

ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்திய கண்டனம்

புதுடெல்லி: எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதுவரின் தீங்கிழைக்கும் அநீதியான கருத்துக்களை இந்தியா சாடியுள்ளது. பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், ஐ.நா பொதுச்சபையில் ‘அமைதி கலாச்சாரம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோயில் ஆகியவைகளை உள்ளடக்கி பேசியதற்கு இந்தியா இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி … Read more

‘வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்’ – ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “வறட்சியால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் கருகி வருகின்றன. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வாட்டும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியாத … Read more

“அர்ப்பணிப்பு மிக்கவர்” – அமேதி காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரியங்கா வாழ்த்து

புதுடெல்லி: “அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர்” என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி லால் சர்மா குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காந்தி – நேரு குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் … Read more

ரூ.500 மாத ஊதியத்துக்காக மூதாட்டி அலைக்கழிப்பு – காரைக்குடி நகராட்சியில் அதிகாரிகள் அலட்சியம்

காரைக்குடி: காரைக்குடியில் ரூ.500 மாத ஊதியத்தைப் பெற நகராட்சி அதிகாரிகள் அலையவிட்டதால் விரக்தி அடைந்த மூதாட்டி வேலையே வேண்டாமென உதறினார். காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மீனாம்பாள் ( 80 ) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் படிப்பகத்தில் இருந்து முந்தைய மாதத்துக்குரிய நாளிதழ்களை எடுத்து வந்து நகராட்சி … Read more