சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டார். இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர் (48) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம்: மக்களவை தேர்தலுக்கான கேஜ்ரிவாலின் ‘10 கேரண்டி’

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கான ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார். இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம் போன்றவைகளை உள்ளடக்கிய அவரது உத்தரவாதங்கள் பரந்த அளவில் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுள்ளது என அக்கட்சியின் புகழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான ஆம் ஆத்மி கட்சியின் … Read more

வெஸ்ட் நைல் காய்ச்சல் | தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்து வருவதாக” தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காய்ச்சலுக்கு காரணம் வெஸ்ட் நைல் கொசு. கொசுக்களில் இருந்து பரவக்கூடிய இந்த நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு, நாம் வசிக்கும் வீடுகளை … Read more

பாஜக ஆட்சியில் அடுத்தது என்ன? – பிரதமர் மோடி நேர்காணல்

புதுடெல்லி: என்டிஏ கூட்டணி மக்களுக்கு அதிகாரங்களை வழங்க விரும்புகிறது, எதிர்க்கட்சிகளோ மக்களின் வளங்களை திருடப்பார்க்கின்றன என்று பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கள்கிழமை) நடக்க இருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், தென் மாநிலங்கள் மீதான கவனம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார். அதன் தொகுப்பு … Read more

“தேவைப்பட்டால் அணுகுண்டுகளை தயாரிப்போம்” – இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி ‘தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், “அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவ நிலைப்பாட்டை மாற்றி அணுகுண்டுகள் தயாரிப்போம்” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இஸ்ரேல் – … Read more

அன்னையர் தினம்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின்: “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!”, என்று தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் … Read more

9 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல்

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதன்படி 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. நான்காம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு … Read more

ஜாமீனில் வந்தவர் மீண்டும் குற்றம் செய்தால் நடவடிக்கை: டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழக டிஜிபி-யை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசுதலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதம்: குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய பிரதமர் மோடி

ஹைதராபாத்: தெலங்கானாவின் மகபூப்நகரில் பாஜக பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் பெருந்திரளானோர் கூடினர். அப்போது சக்கர நாற்காலியில் வந்த இரு மாற்றுத் திறனாளி பெண்கள் கூட்டத்தின் நடுவில் சிக்கித் தவிப்பதை பிரதமர் மோடி மேடையில் இருந்து பார்த்தார். உடனே தனது உரையை நிறுத்திய அவர், “மாற்றுத் திறனாளிகள் அவதிப்படக்கூடாது, அவர்களுக்கு இடம்விடுங்கள். அவர்கள் முன்வரிசையில் அமர ஏற்பாடு செய்யுங்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார். இதைத் … Read more

தொடரும் மழையால் தணிந்த வெப்பம்: மதுரையில் பல இடங்களில் சிக்கிய வாகனங்கள்

மதுரை: மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் தேங்கிய நீரில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. கடந்த சில நாட்களாக மதுரை நகர், புறநகர், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. மதுரை நகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால் மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோடு பகுதியில் மின்சாரக் கம்பி அறுந்து … Read more