“ராகுல் இந்துக்களை வெறுக்கிறார்” – ராமர் கோயிலுக்கு செல்லாததை சுட்டிக்காட்டி எல்.முருகன் சாடல் 

கோவை: “அயோத்தி சென்ற ராகுல் ராமர் கோயிலுக்கு செல்லாதது அவர் இந்துக்களை வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சனிக்கிழமையன்று உதகையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ வளாகத்தில் ‘சிசிடிவி’ கேமராக்கள் 20 நிமிடங்கள் செயல்படவில்லை. காலநிலை காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை ஒப்பிடும் போது … Read more

மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் போன்ற அணிகலன்கள் அணிய மத்திய அரசு தடை

மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும், அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவைக்குப் பிந்தைய நோயாளிகளுக்கான தேறுதல் வார்டுகளிலும் ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் நோயாளிகள், … Read more

வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா செயல் இழப்பு ஏன்? – நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் டிவி திரையில் திடீரென ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டதாக ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதன்படி இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுபாட்டு கருவிகள், விவிபாட் என மொத்தம் 7,942 இயந்திரங்கள் … Read more

பிரதமர் மோடி சாயலில் பானிபூரி வியாபாரி!

குஜராத்தின் ஆனந்த் நகரை சேர்ந்தவர் அனில் பாய் தாக்கர் ( 71 ). அவர், அங்கு பானிபூரி கடை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் சாயலில் இருப்பதால் அவரது கடையில் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. பானிபூரி சாப்பிட்டுவிட்டு அவரோடு நின்று புகைப்படம், வீடியோ எடுப்பதை வாடிக்கையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது குறித்து அனில் பாய் தாக்கர் கூறியதாவது: பிரதமர்நரேந்திர மோடியின் சாயலில் இருப்பதால் என்னை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது உண்மையான பெயர் … Read more

“திமுக – அதிமுக ஆட்சியில் தடையின்றி தொடரும் கனிமவளக் கொள்ளை” – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: “திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்”, என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

கடவுளுக்கு துரோகம் செய்கிறார் ராகுல்: ஸ்மிருதி இரானி விமர்சனம்

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் அடுத்த மாதம் 20-ம் தேதி 5-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் அமேதி தொகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அதற்கு முன்பாக அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது: வயநாடு தொகுதியில் தேர்தல் முடிந்தவுடன் ராகுல் அமேதி வருவார் எனவும், அதற்கு முன்பு அவர் ராமர் … Read more

“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு” – ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: “அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் … Read more

கேஜ்ரிவால் பதவியில் நீடிக்க அதிகார மோகமே காரணம்: உயர் நீதிமன்ற கருத்தை கூறி பாஜக விமர்சனம்

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகும் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு பதவி மோகமும் மக்கள் பணத்தில் கட்டப்பட்ட பங்களா மீதான மோகமுமே காரணம் என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான பாட … Read more

சென்னை மாநகரில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது: அதிகாரிகள் உறுதி

சென்னை: சென்னை மாநகர் பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல்மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் ஏப்.27 வரை தமிழகத்தில் சராசரியாக 54 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 9.4 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். குற்றவாளி தங்கியிருந்த விடுதி, பாழடைந்த கட்டிடம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனையும் நடத்தினர். பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு … Read more