பத்திர பதிவு, வருவாய், தொலைவு அடிப்படையில் தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை: பத்திரப்பதிவு எண்ணிக்கை, வருவாய், தொலைவு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்தல், பிரித்தல் உள்ளிட்ட சீரமைப்புக்கான அடிப்படை பணிகளை பதிவுத்துறை தொடங்கியது. இதுகுறித்து, அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கும் கூடுதல் சீட்டு பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பதிவுத்துறையில் தற்போதுள்ள 56 பதிவு மாவட்டங்களில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பதிவுத்துறை தொடர்பாக கடந்த ஏப்.5-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து … Read more

“நெருக்கடி கொடுத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” – வாட்ஸ்அப் வாதம் @ டெல்லி ஐகோர்ட்

புதுடெல்லி: “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசால் கடந்த 2021ம் ஆண்டு ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’ கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் அவர்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று கூறுவதாக அதற்கு எதிர்ப்பு … Read more

நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29-க்கு ஒத்திவைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018-ம் ஆண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. … Read more

2-ம் கட்ட தேர்தல் | காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகம்; மகாராஷ்டிராவில் குறைவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மக்கள் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமைச் … Read more

மதுபான கொள்கை ஊழலில் முக்கிய சதிகாரர் கேஜ்ரிவால்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில்

புதுடெல்லி: “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய சதிகாரர் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்” என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்தது. டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் 67607 கூறியிருந்தார். இதற்கு அமலாக்கத் துறை தாக்கல் செய்த 734 பக்க பதில் மனுவில் கூறியிருப்பதாவது: மதுபான கொள்கை ஊழல் … Read more

மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை

சென்னை: மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் குவாரிகளில் கிடைத்த … Read more

2-ம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன், நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் வாக்களிப்பு

புதுடெல்லி: மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் காலை தொடங்கி பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். பிரதமரின் வேண்டுகோள்: முன்னதாக, இன்று அதிகாலை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த … Read more

கல்லணை கால்வாய் புனரமைப்புக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

சென்னை: கல்லணை கால்வாய் புனரமைப்பு 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை செயலர் சந்தீப் சக்சேனா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.19-ம் தேதி நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், கல்லணை கால்வாய் அமைப்பு முதல் கட்ட விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீன மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,037 கோடி நிதிஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 2-ம் கட்ட பணிகள் ரூ.400 கோடியில் … Read more

டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை: காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 28 தொகுதிகளில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உட்பட 16 இடங்களில் … Read more