மேகதாது விவகாரம் | கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று (மார்ச் 21) தனித் தீர்மானம் ஒன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனால் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி ஆதரவுடன், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து தமிழக முதல்வர் … Read more

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது சொத்தில் மகன் உரிமை கோர முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருபெண், மறதி உட்பட பல்வேறு நோய் காரணமாக படுத்த படுக்கையாக உள்ள தனது கணவரின் சொத்துக்கு சட்ட பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை கவனித்து வருகிறேன். அவருக்கான மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளேன். எங்களுக்கு ஒரு மகன் இருந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எனது பெயரில் ஒரு வீடும், என் கணவர் … Read more

கோழி இறைச்சி ரூ.1,000, டீ ரூ.100, முட்டை ரூ.36, உளுந்த வடை ரூ.80: மீண்டும் உயர்ந்த கேஸ் விலையால் தவிக்கும் இலங்கை மக்கள்

கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1000-ஆகவும், தேனீர் ஒரு கப் ரூ. 100 ஆகவும், ஒரு முட்டை விலை ரூ.36 ஆகவும் விற்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் … Read more

விலைவீழ்ச்சியால் அழுகும் தக்காளி; குளிர் கிடங்குகள், கொள்முதல் விலை நிர்ணயம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: விலைவீழ்ச்சியால் தக்காளி அழுகிவருவதால் குளிர் கிடங்குகள், கொள்முதல் விலை நிர்ணயம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், மேற்கு மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே வயலில் அழுக விட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. விவசாயிகள் வளர்த்த பயிர்களை அவர்களே அழுக விடுவதை விட வேதனை வேறு எதுவும் … Read more

லாலுவின் ஆர்ஜேடி கட்சியுடன் இணைந்தது எல்ஜேடி: 25 ஆண்டுகளுக்கு பின் சரத்யாதவ் முடிவு

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சி (எல்ஜேடி) நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி இணைந்தது. லோக்தந்த்ரிக் ஜனதாதளம் கட்சியின் தலைவரான சரத் யாதவ்,தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி, டெல்லியி்ல் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் இணைப்பு முறைப்படி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சரத் யாதவ் … Read more

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மை இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மையான இலக்கு “இன்னுயிர் காப்போம் -நம்மை காக்கும் 48″ என்ற திட்டத்தின் மூலம், கடந்த 18.11.2021 முதல் 18.3.2022 வரை, அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும் என மொத்தம் 33, 247 பேர் இந்த 48 மணி நேர இலவச சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 18-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் … Read more

வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிப்பு: மக்களுக்கு ஐசிஎம்ஆர் நம்பிக்கை தகவல்

புனே: வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூடுதல் இயக்குநர் சமிரான் பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் ஐரோப்பா, ஆசிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் … Read more

தமிழ் வழிக் கல்வியில் மருத்துவப் படிப்பு: அரசு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தூத்துக்குடி: தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் மருத்துவ படிப்பை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா 4-வது அலை ஜூன் மாதத்துக்கு பிறகு வரும் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தில் கரோனா முற்றிலுமாக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி தொற்று 100-க்கும் குறைவாக உள்ளது. உயிரிழப்பு இல்லை என்ற நிலை தொடர்ந்து … Read more

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது: முதல்வர் பசவராஜ் அஞ்சலி

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21). இவர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் சிக்கியிருந்த நவீன் … Read more

போலந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் பைடன்: போர் வலுக்கும் சூழலில் திடீர் பயணம்

கீவ்: உக்ரைன் போர் வலுத்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரஸ் டூடாவை சந்தித்து போர் நிலவரம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்கிறார். பெல்ஜியத்தில் நேட்டோ தலைவர்கள், ஜி7 தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்துவிட்டு அவர் போலந்து செல்கிறார். உக்ரைனில் … Read more