சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் முதல்வர் தனிகவனம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறார்: சேகர் பாபு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தனிகவனம் செலுத்தி, அதுதொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் ஒரு நல்ல முடிவெடுத்து, சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “சிதம்பரம் நடராஜர் கோயிலின் உண்மை நிலையை கண்டறிவதற்கு இணை ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ளோம். அவரது அறிக்கை வரப்பெற்றவுடன், சட்ட வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பிரச்சினையப் … Read more

ஏவுகணைகளால் தாக்கப்படுவோம் என ஒவ்வொரு நொடியும் பயந்தோம்: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர் பேட்டி

உக்ரைன் மீது கடந்த 17 நாட்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பயின்ற இந்திய மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டுவருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் உக்ரைனில் இருந்து தப்பி அண்டை நாட்டுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று முன்தினம் ஏராளமான இந்தியர்கள் வந்தடைந்தனர். உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதி உத்தரபிரதேச … Read more

நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒடிஷாவிலிருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில் மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக … Read more

உத்தரகாண்ட் புதிய முதல்வர் யார்?- மூத்த தலைவர்கள் கடும் போட்டி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை கைபற்ற பாஜக மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரகண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 47ல் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனினும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தான் போட்டியிட்ட காதிமா தொகுதியில் தோல்வியடைந்தார். 3 முதல்வர்கள் … Read more

தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் திமுக: மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று (13-03-2022) நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் டி.என். ராஜரத்தினத்தின் கொள்ளுப் பெயரனின் திருமண நிகழ்ச்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர், நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் சாதனைகள் மற்றும் பெருமைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம் விலகல்

பெங்களூருவை சேர்ந்த சி.எம்.இப்ராஹிம் 1967-ல் ஜனதா பரிவாரில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1978-ல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர், 2 ஆண்டுகளுக்கு பிறகு காங் கிரஸில் இணைந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்த போது சுற்றுலா, விமானத் துறை அமைச்சராக இருந்தார். அதிருப்தி கர்நாடக மேலவை உறுப் பினராக இருக்கும் இப்ராஹிம் மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு கட்சி மேலிடத்திடம் கோரினார்.இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் மேலிடம் மேலவை … Read more

மசூதி, குடியிருப்பு பகுதிகள் மீது குண்டுவீச்சு: ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானப்படை தளம் தகர்ப்பு

ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் வாசில்கிவ் நகரில் அமைந்துள்ள விமானப்படைத் தளம் தகர்க்கப்பட்டது. மரியுபோல் நகரில் மசூதி, குடியிருப்பு பகுதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. உக்ரைன் அதிபர் ஜெலன்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், “கீவ் நகரை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இந்த நேரத்தில் ரஷ்ய தாய்மார்களிடம் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன். உங்கள் மகன்களை போருக்கு அனுப்ப வேண்டாம். அவர்கள் கொல்லப்படலாம் அல்லது சிறைபிடிக்கப்படலாம். உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து உடனடியாக செயல்படுங்கள்” என்று … Read more

துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசி ஆளுநர்; பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கவும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: கோவை மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசிய தமிழக ஆளுநர் ரவியை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி பற்றிப் … Read more

நாடுமுழுவதும் 3,116 பேருக்கு கரோனா தொற்று: பலி எண்ணிக்கை 47

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,116 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 4,29,90,991 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவில் இருந்து 4,24,37,072 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தி்ல் 5,559 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் … Read more

சமூக வலைதளங்கள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி சாதி, மத மோதல்களை உருவாக்குவோர் மீது உடனடி நடவடிக்கை அவசியம்: மாவட்ட ஆட்சியர், காவல் துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சாதி, மத வக்கிரம் பிடித்தவர்கள் சமூகவலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தி, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கின்றனர். இவர்களை முளையிலேயே களையெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது.முதல்வர் ஸ்டாலின் தனது நிறைவுரையில் கூறியதாவது: நாம் அனைவரும் சேர்ந்ததுதான் … Read more