பூட்டியே கிடந்த மதுரை மேயர் இல்லம் 20 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பொலிவு: மேயர் இந்திராணி வசிக்க வருவாரா?

மதுரை: பூட்டியே கிடந்த மதுரை மேயர் இல்லம் 20 ஆண்டுகளுக்கு பொலிவுபெற்றுவரும் நிலையில், புதிய மாநகராட்சி மேயர் இந்திராணி அதில் வசிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர்களுக்காக கட்டிய மேயர் இல்லம் கடந்த 20 ஆண்டாக யாருமே வசிக்காததால் பூட்டியே கிடக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மேயர் இந்திராணியாவது இங்கு வருவாரா? அல்லது மற்றவர்களை போல் அவரும் வராமல் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நகராட்சியாக இருந்த மதுரை கடந்த 1971ம் ஆண்டு … Read more

வேதா நிலையத்தை அரசுடைமையாக்க செலுத்தப்பட்ட டெபாசிட் தொகை வட்டியுடன் அரசு கணக்கில் செலுத்தப்பட்டது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடைமையாக்க நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட டெபாசிட் தொகை வட்டியுடன் சேர்த்து சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு ஏதுவாக போயஸ் தோட்டம் இல்லத்தை அரசுடைமையாக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.68 கோடியை கடந்த … Read more

மார்ச் 16: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.15 வரை மார்ச்.16 மார்ச்.15 … Read more

மார்ச் 16: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

’பேர்ல் ஹார்பர்’, ’செப். 11’ தாக்குதலுடன் ஒப்பீடு – அமெரிக்க நாடாளுமன்றத்தை உலுக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உரை

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி மூலமாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி, ”ரஷ்யாவிற்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் புதன்கிழமை காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது அவர், உக்ரைன் தாக்குதலை, ’பேர்ல் ஹார்பர்’ மற்றும் ’செப்டம்பர் 11’ தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பாகவும், பேசி முடித்த பின்னரும் நாடாளுமன்றத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். இந்தப் பேச்சின்போது, ரஷ்யத் … Read more

தகுதி உள்ளோருக்கும் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை நிறுத்தம்: உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை: “தகுதி உள்ளவர்களுக்கும் முதியோர் ஒய்வூதிய உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது“ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: “ஏழை, எளிய சாமானிய மற்றும் ஆதரவற்றோர்களுக்காக முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இதில், இலங்கை தமிழர்கள் உட்பட 9 பிரிவினருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது . ஆரம்பத்தில் ரூ.200 வழங்கப்பட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ரூ.500 ஆக வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதிய … Read more

உக்ரைன் துயரம் | ‘மரியுபோல் நகரில் இருந்து வெளியேற காரும் பெட்ரோலும் இருந்தால்தான் சாத்தியம்’

மரியுபோல்: காரும் பெட்ரோலும் இருந்தால் மட்டுமே மரியுபோல் நகரத்தில் இருந்து வெளியேற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக உக்ரைனில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 20 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் தாக்குதலின் ஆரம்பம் முதலே உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தை ரஷ்யா கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் தாக்கி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதலில் அந்நகரத்தில் … Read more

தமிழகத்தில் இன்று 72 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 23 பேர்: 161 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,145. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,13,248. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 23 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

அசாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

திஸ்பூர்: “அசாம் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 35 சதவீதம் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சிறுபான்மையினராக இருக்க முடியாது“ என்று அம்மாநில முதல்வர் சர்மா தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில், ஆளுநரின் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், “இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்; சம வாய்ப்பு மற்றும் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். இங்கு பழங்குடி இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் நிலங்கள் … Read more

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சைக்கிளை ஊக்குவிக்கும் தீர்மானம்: ஐ.நா. நிறைவேற்றம்

நியூயார்க்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு கருவியாக சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு கருவியாக சைக்கிளை ஊக்குவிக்கும் தீர்மானம் ஒன்று, உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சைக்கிளுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில், “வளரும் மற்றும் வளர்ந்த … Read more