சுமியில் சிக்கியுள்ள மாணவர்களை செஞ்சிலுவை சங்க உதவியுடன் மீட்க இந்திய தூதரகம் தீவிர முயற்சி

கீவ்: ”தைரியமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று சுமியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு தூதரகம் நம்பிக்கை ஊட்டியுள்ளது. கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் போர்ப் பதற்றத்திற்கு இடையில் சிக்கியிருக்கும் சுமார் 1,000 இந்தியர்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அதிகாலை உக்ரைனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில், “உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு; மார்ச் 8-ல் தண்டனை அறிவிப்பு

மதுரை: பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். 2015-ல் கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி … Read more

நள்ளிரவில் கங்கைக்கரையில் பிரதமர் மோடி!- தேநீர் அருந்தி, பீடா சுவைத்தது பாஜக வெற்றிக்கு உதவுமா?

புதுடெல்லி: உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை வாரணாசியில் முடித்த பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில், கங்கைக்கரையில் அமர்ந்து ஆலோசித்தார். அங்கு தேநீர் அருந்தி, பீடா சுவைத்ததும் அவரது பாஜகவின் வெற்றிக்கு உதவுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி 10 முதல் துவங்கி ஏழுகட்டங்களாக உ.பி. சட்டப்பேரவைக்கானத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் பிப்ரவரி 7 இல் நடைபெற உள்ளது. இவற்றில், உ.பி.யின் கிழக்குப்பகுதியிலுள்ள 9 மாவட்டங்களின் 54 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பிரதமர் … Read more

வசமானது துறைமுக நகரம் மரியுபோல்; மக்கள் வெளியேற கெடு… 10-வது நாளில் அதிகரித்த ரஷ்யப் படைகளின் ஆதிக்கம்

கீவ்: ஜேப்பரோஜியா அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்யா இன்று மரியுபோல் துறைமுக நகரை முடக்கியுள்ளது. சிறிது நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா, அந்த நேரத்தைப் பயன்படுத்தி மக்கள் வெளியேறலாம் என்று கூறியுள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை 10-வது நாளாக இன்று ரஷ்யா தொடர்ந்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் ஒவ்வொரு நாளும் உக்ரைன் நிறைய இழப்புகளை சந்தித்து வருகிறது. நேற்று ரஷ்ய அணுமின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று, மரியுபோல் … Read more

திருமானூர் ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 250 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டி, 500 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுடன் இன்று நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5 ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் எம்எல்ஏ சின்னப்பா, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் … Read more

உக்ரைனில் மருத்துவக் கல்வி முடித்தவர்கள் இங்கே பயிற்சி மருத்துவம் பயிலலாம்: தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு கரோனா, போர் போன்ற எதிர்பாராத சிக்கல்களால் பயிற்சி மருத்துவம் முடிக்காதவர்கள் இங்கே தாயகத்திலேயே அதைச் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஒழுங்குமறைய அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இதனை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து … Read more

'எங்களுக்கும் இந்த மோதலுக்கும் சம்பந்தம் இல்லை': உக்ரைனை கைகழுவிய நேட்டோ

ரஷ்ய ராணுவ நடவடிக்கையால் மிக மோசமான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன் தொடர்ந்து நேட்டோவிடம் தங்களின் நாட்டை நோஃப்ளை ஜோனாக அறிவிக்க வலியுறுத்தியது. ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள நேட்டோ உக்ரைனைக் கைகழுவியுள்ளது. முன்னாள் சோவியத் குடியரசு தேசமான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்திலும், மேற்கத்திய ராணுவ கூட்டுக்குழுவான நேட்டோவிலும் இணைய கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதுவரை இரண்டிலுமே உக்ரைன் உறுப்பு நாடாகவில்லை. இந்நிலையில் உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்துள்ளது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்கள் … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

சென்னை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும்விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காகவே எம்.பி., எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வானொலியில் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) உரைகளை தொகுத்து, தமிழில் ‘மனதின் குரல்’ என்ற பெயரிலேயே 5 தொகுதி நூலை செந்தில் பதிப்பகம் உருவாக்கியுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியில் நேற்று நடைபெற்றது. நூலை … Read more

உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் சவப்பெட்டி வைக்கும் இடத்தில் 10 பேர் அமர முடியும்: கர்நாடக பாஜக எம்எல்ஏ பேச்சால் பெரும் சர்ச்சை

பெங்களூரு: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் சவப்பெட்டியை விமானத்தில் வைக்கும் இடத்தில் 10 பேர் அமர முடியும் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். க‌ர்நாடக மாநிலத்தின் ஹாவேரி பகுதியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் (22) கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் போரில் உயிரிழந்தார். உணவுப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று வரிசையில் காத்திருந்த போது தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின. அவரது பெற்றோர் தங்களது மகனின் உடலை … Read more

ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறை: புதின் சட்டம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிபர் புதின் ஒப்புதலுடன் உடனடியாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று (மார்ச் 5) பத்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா பொதுமக்கள் உயிருக்கு குந்தகம் விளைவித்து போர்க் குற்றம் புரிந்துவருவதாக அந்நாட்டின் மீது உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மேலும், … Read more