ஒரே நாடு ஒரே தேர்தல்; எந்த மாநிலத்திலும் எந்த நேரத்திலும் தேர்தல் நடக்கலாம்: அண்ணாமலை

கோவை: தேர்தல் முடிந்ததும் நீட் பிரச்சினையை மறந்து திமுகவினர் தூங்கிவிடுவார்கள், அடுத்த தேர்தலில் கையில் எடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் 28-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உண்ணாமலையை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை இன்று (ஜன.13) பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் நேரடி கருத்து மோதல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் 80 சதவீதம் பாஜகவை தாக்கிதான் … Read more

ஆசம்கான் சிறையில்.. ஜெயப்பிரதா உ.பி.க்கு வெளியில்..! – இரு முக்கிய தலைவர்கள் இன்றி தேர்தலை சந்திக்கும் ராம்பூர்

உத்தரபிரதேச மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தல், மேற்கு உ.பி.யின் 11 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட ராம்பூர் மாவட்டத்தின் 5 தொகுதிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படு கிறது. 2017 தேர்தலில் 3 தொகுதிகள் பாஜக வசம் சென்றன. ராம்பூர், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கானின் சொந்த மாவட்டம் ஆகும். 2019-ல் முதல் முறை மக்களவை எம்.பி.யான ஆசம் கான், சமாஜ்வாதியின் முக்கிய முஸ்லிம் தலைவர் … Read more

பிப்ரவரி 13: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,36,262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.12 வரை பிப்.13 பிப்.12 … Read more

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக புர்கா அணிந்து வந்த முஸ்லிம் மாணவியிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய கல்லூரி நிர்வாகம்

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவியிடம், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியது. மத்தியபிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் சாத்னா பகுதியில் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் எம்.காம் படிக்கும் மாணவி ருக்சானா கான் என்பவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு புர்காவும், ஹிஜாபும் அணிந்து வந்துள்ளார். இதையடுத்து அவரைக் கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவரை மன்னிப்புக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டுள்ளது. இதையடுத்து ருக்சானாவும் மன்னிப்புக் … Read more

பிப்ரவரி 13: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,36,262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

கர்நாடக மாநில அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் தொழுகை நடத்திய மாணவர்கள்: அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறையில் தொழுகை நடத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி யுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு வட்டாரத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளுக்கு ஹிஜாப்அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேவேளையில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தென் கன்னட மாவட்டம் கடபா அருகிலுள்ள அங்கதட்காவில் அரசு தொடக்கப் … Read more

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மேலும் 90 பவுன் நகை சிக்கியது; சீருடையில் இருந்து ரூ.25 ஆயிரமும் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் மேலும் 90 பவுன் நகை சிக்கியது. அத்துடன் பணிமுடிந்து வந்த பின்பு வீட்டில் காக்கி சீருடையை சோதனையிட்டபோது அதில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி(52). இவரது கணவர் சேவியர் பாண்டியன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். கண்மணி … Read more

கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை நியமனம்

கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் அதிதி அச்சுத் (34). திருநங்கையான இவர் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான இந்திய மாணவர் கூட்டமைப்பின் உள்ளூர் தலைவராக பதவி வகித்துள்ளார். பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இப்போது, அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்திலேயே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட … Read more

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று (13-02-2022) மாலை காணொலி வாயிலாகத் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில்-இளங்கோவடிகளால் போற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான இந்த திண்டுக்கல்லில் … Read more

தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ரூ.18,839 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்ட முன்முயற்சியை இந்த ஒப்புதல் முன்னெடுத்துச் செல்லும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை … Read more