இந்தியர்கள் நாடு திரும்பும் செலவை மத்திய அரசு ஏற்கிறது

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் கீவ் நோக்கி சென்றது. ஆனால் ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியதால் அந்த விமானம் பாதி வழியில் திரும்ப நேரிட்டது. இதையடுத்து உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வழிகளை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதுகுறித்து ஹங்கேரி, ஸ்லாவேகியா வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசினார். இரு நாடுகளும் மீட்புப் பணிக்கு … Read more

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தோற்கடித்த ரஷ்யா: இந்தியா வாக்களிக்காதது ஏன்?

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, அல்பேனியா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை 11 நாடுகள் அங்கீகரிக்க இந்தியா, சீனா, யுஏஇ ஆகிய நாடுகள் தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது ரஷ்யா. ரஷ்யா ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்த உறுப்பினர் என்பதால் அதன் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. இருப்பினும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உலக … Read more

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பிப்.28-ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் 28-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 28-ம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் … Read more

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உத்தரவிடப்படும்: பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி

புதுடெல்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்த நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பெரும்பான்மை பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. உக்ரைனில் சுமார் 24,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவ, மாணவியர் ஆவர். தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ரஷ்ய … Read more

தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் கடும் மோதல்; உதவி கோருகிறார் உக்ரைன் அதிபர் – ஆயத்தமாகும் அமெரிக்க படை

கீவ்: உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே நேற்று நீண்ட நேரம் கடுமையான சண்டை நீடித்தது. போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை 30 நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை … Read more

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி; திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? – அமித் ஷா கேள்வி

புதுடெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாதபுதிய கூட்டணி பேசப்படுகிறது. இதன் மீதான ஒரு கேள்வியில் அக்கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? என மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 10 முதல் துவங்கி உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கி உள்ளார். அதில், தேசிய … Read more

உக்ரைனில் ரஷ்யாவின் உக்கிரம் ஏன்?

லியோ டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ நாவலை இவ்வாறு தொடங்குகிறார், “நல்லது இளவரசே! ஜெனோவும் லுக்காவும் தற்போது நெப்போலியன் போனபார்ட்டின் குடும்பத்தின் வசமுள்ள நிலப்பரப்புகள் அன்றி வேறில்லை.’’ உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து 2014-ம் ஆண்டிலிருந்து தன்னாட்சி உரிமை கோரி வரும்டானெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா முறையான அங்கீகாரம் அளித்தபோது, எனக்கு ‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் வரிகள்தான் நினை வுக்கு வந்தன. ரஷ்யாவுக்கு ஏன் பதற்றம்? ரஷ்யாவின் நிலப்பரப்பு கற்பனைக்கு … Read more

சில இடங்களில் வென்றதால் பாஜக காலூன்றிவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது: முத்தரசன் சிறப்புப் பேட்டி

சென்னை: “பாஜகவையும் அந்தக் கட்சியின் கொள்கையையும் தமிழக மக்கள் ஏற்கவில்லை, ஏற்கவும் மாட்டார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: “சென்னையில் ஓர் இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் கூட பல இடங்களில், பல வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்த்து நின்று பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கூடுதல் டிக்கெட்களை வழங்குவது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் சுவாமியை சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனம் மூலம் தரிசிக்க இன்று (23-ம் தேதி) காலை 9 மணிக்கு இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. கரோனா 3-ம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை 24-ம் தேதி முதல், இம்மாதம் 28-ம்தேதி வரை … Read more