அபுதாபியை தாக்க வந்த இரு ஏவுகணைகளை அழித்தோம்: ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி: ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரு ஏவுகணைகளை பதிலடி தாக்குதலில் அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “தலைநகர் அபுதாபியை நோக்கி இன்று (திங்கட்கிழமை) ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய இரு ஏவுகணைகளை எங்கள் ராணுவம் தாக்கி அழித்தது. ஐக்கிய அரபு அமீரகம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. நாட்டை பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் இயங்கும் … Read more

கோவை சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் நியமனம்: மாநில தேர்தல் ஆணையர்

சென்னை: கோவை தேர்தல் சிறப்பு பார்வையாளராக, ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார். நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: “தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னர் 31,030 வாக்குச்சாவடிகள் இருந்தன. இதில் அங்கீகரிக்கப்பட்ட … Read more

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

விஜயவாடா: கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. மகாராஷ்டிர மாநிலம் திம்பகேஷ்வரில் உற்பத்தியாகும் கோதாவரி நதி, கங்கைக்கு அடுத்தபடியாக நாட்டின் 2-வது நீளமான நதி ஆகும். இது தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நதியில் ஆண்டுக்கு 247 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலப்பதாக கூறப்படுகிறது. இந்த உபரி … Read more

தடுப்பூசியா, தனிமனித சுதந்திரமா? – அமெரிக்காவில் தொடரும் விவாதம்

பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரும்போதுதான் டேனியல்லா தோர்ன்டனுக்கு, தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் தனது 9 வருட வேலையை இழந்துவிட்ட தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த வருடம் பதவியேற்றத்திலிருந்து கரோனாவை ஒழிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் அங்கு பணியிடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்ந்து அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான் தற்போது டேனியல்லா 9 வருடங்களாக சிட்டி க்ரூப் வங்கியில் பார்த்த வேலையை இழந்திருக்கிறார். ஆனால், இந்த முடிவை … Read more

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 262 பேருக்கு பாதிப்பு- 4,229 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,42,929. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,84,278. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 262 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

தனியார் துறைகளில் 75% ஒதுக்கீடு; ஹரியாணா உயர் நீதிமன்ற தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: தனியார் நிறுவனங்களில் 75 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் ஹரியாணா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க கடந்த2020-ம் ஆண்டு பாஜக மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்துடன் குறைந்தபட்ச ஊதியமும் ரூ.30 ஆயிரம் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை எதிர்த்து, தனியார் … Read more

பிரேசிலில் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் கனமழை: வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் 94 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பெட்ரோபோலிஸ் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று 3 மணி நேரத்தில்25.8 செ.மீ. அளவுக்கு கனமழைகொட்டித்தீர்த்தது. இது முந்தைய30 நாட்களில் அங்கு பெய்த மொத்த மழையின் அளவாகும். மேலும் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான மழை இதுவெனக் கூறப்படுகிறது. … Read more

ரவுடிகள், குண்டர்களுக்கு ஆதரவாக கோவை போலீஸ்: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: “குண்டர்களையும, ரவுடிகளையும் வெளியேற்றுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோவை மாநகராட்சியில் ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “எஸ்.பி.வேலுமணி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள், குண்டர்களை வெளியேற்ற வேண்டும் என்று நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. … Read more

இரு தினங்களில் பஞ்சாப் தேர்தல்… அரசு இல்லத்தில் சீக்கிய மதத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே நிலையில், தனது டெல்லி அரசு குடியிருப்பில் பிரதமர் நரேந்தர மோடி, சீக்கிய மதத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். பிப்ரவரி 20-ல் ஒரே கட்டமாக பஞ்சாப்பின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பஞ்சாப்பின் அரசியலில் அங்குள்ள சீக்கியர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது அரசு இல்லத்தில் சீக்கியர்களுடன் இன்று காலை ஒரு முக்கியச் சந்திப்பு நடத்தினார். இதில், … Read more

ஈரான் தீவிரமாக இருந்தால் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்: அமெரிக்கா

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தீவிரமாக இருந்தால், சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் கலந்துகொண்டுள்ளன. அமெரிக்காவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளது. அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் … Read more