‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’-கரோனாவிலிருந்து மீளும் நிலையில் போர் அவசியம்தானா?

இரண்டு பழமொழிகள்: ‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’; ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’. உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் இந்தியாவின் நிலை இதுதான். சர்வதேச அரங்கில் எல்லா நேரங்களிலும், எல்லா பிரச்சினைகளிலும் இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நல்ல தோழனாக இருக்கும் நாடு – ரஷ்யா. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு சாதகமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகிற நல்ல நண்பன். ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு மிக நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. ‘நேட்டோ’ … Read more

ரயில்களில் பயணச்சீட்டு எடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை தேவை: தமிழக டிஜிபிக்கு தெற்கு ரயில்வே கடிதம்

சென்னை: ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது: தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர், விரைவு ரயில்கள் உட்பட பல ரயில்களில் செல்லும்போது பயணச்சீட்டு எடுப்பது இல்லை. ஆனாலும், முதலாவது, 2-வது வகுப்புகளின் முன்பதிவு பெட்டிகளில் பிற பயணிகளின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். பரிசோதகர்கள் அவர்களிடம் பயணச்சீட்டு கேட்கும்போது, சம்பந்தப்பட்ட … Read more

ரஷ்யா-உக்ரைன் விவகாரம்- பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் அமைச்சரவைக் குழுவில் இடம்பெறாத போதிலும் அவர்களும் இக்கூட்டத்தில் … Read more

ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, அழிவுக்கு ரஷ்யாவே காரணம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே … Read more

பிப்ரவரி 24: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,47,581 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

மாணவிகள், பெற்றோர் போராட்டத்தின் பின்னணி; ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ தலையீடு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி தரப்பு தகவல்

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ அமைப்பினர் தலையிட்ட பிறகே முஸ்லிம் மாணவிகள் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பு கர் நாடகஉயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனிடையே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, … Read more

மூண்டது போர்! – உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரே வாரத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. சற்று முன்னர் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜெனீவாவில் … Read more

இந்திய தூதரக உதவி கிடைக்காமல் தவித்து வருகிறோம்: உக்ரைனில் இருந்து அந்தியூர் மாணவி பகிர்ந்த தகவல்கள்

ஈரோடு: இந்திய தூதரகத்தின் உதவி கிடைக்காத நிலையில், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம் என உக்ரைனில் மருத்துவம் படிக்கும் அந்தியூர் மாணவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் – குணவதி தம்பதியினரின் மகள் மவுனிசுகிதா (20). உக்ரைனில் உள்ள லையு நேசனல் மெடிகல் யுனிவர்சிடியில், மூன்றாமண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் … Read more

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் கைது: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இவ்வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீக் ஷித், ஜே.எம்.காஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணை முறையையும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) … Read more

அமெரிக்க எச்சரிக்கை முதல் புதினின் போர் அறிவிப்பு வரை – உக்ரைன் நெருக்கடியின் சமீபத்திய டைம்லைன்

மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தத் தொடங்கிய நிலையில் ரஷ்ய அதிபரின் உத்தரவும் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுடைய அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய மனித உயிர்கள் இழப்புக்கு வித்திடும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க … Read more