சென்னைக்கு வந்தது 3.89 லட்சம் CORBEVAX தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை: மத்திய அரசின் சுகாதாரத் துறை 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான CORBEVAX தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. இன்று சென்னைக்கு வரப்பெற்ற 3 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (24-02-2022) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு … Read more

‘‘புதினிடம் பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும்; ஆதரவு தாருங்கள்’’- உக்ரைன் தூதர் உருக்கம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்களிடம் செல்வாக்கு உள்ளது, அவர் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், உக்ரைனுக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் இன்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் … Read more

”நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா” – உக்ரைன் அதிபர்

கிவ்: “இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகள் தாக்கியதுபோல் எங்கள் நகரை ரஷ்யா தாக்கியுள்ளது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பேசினார். உக்ரைன் மீதான தாக்குதலை நிராகரிக்குமாறு ரஷ்ய மக்களுக்கு வீடியோவில் நேரடி வேண்டுகோள் விடுத்தார். ரஷ்யர்களை நோக்கி அவர், “நீங்கள் எதற்காக, யாருடன் சண்டையிடுகிறீர்கள்? உங்களில் பலர் உக்ரைனுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களில் பலருக்கு உக்ரைனில் குடும்பம் … Read more

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்று ஒரு கட்டிடத்தில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களைக் கொண்டு, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக குழாயில் … Read more

உண்டியலில் சேர்த்த சில்லறைகளை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய அசாம் காய்கறி வியாபாரி

பார்பேட்டா: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹபிஸூர் அக்ஹாந். காய்கறி வியாபாரம் செய்து வரும் அவருக்கு சொந்தமாக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடந்த ஒராண்டாக அதற்காகபணம் சேகரிக்க ஆரம்பித்தார். அன்றாடம் வரும் வருவாயில் கொஞ்சம் சில்லறைகளை உண்டியலில் போட்டு சேகரித்து வந்தார். ‘சுசூகி ஆக்சஸ் 125’ ஸ்கூட்டரை வாங்க விரும்பிய அக்ஹாந், சுசூகிநிறுவனம் நடத்திய வாகன விற்பனை முகாமுக்குச் சென்று, தனது விருப்பத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது உண்டியல் சேமிப்பு பணம் ஒரு … Read more

ஆயுதம் ஏந்த தயாராக உள்ள எவரும் படையில் இணையலாம்: குடிமக்களுக்கு உக்ரைன் அரசு அழைப்பு

‘ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்’ என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் விடுத்த அறிவிப்பில், “ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதலில் ஏறத்தாழ 100 உக்ரைன் பாதுகாப்பு படையினர் பலியானதாகவும், உக்ரைன் அரசின் 8 இணையப் பக்கங்கள் … Read more

'சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல': திக பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர்

கடலூர்: மன்னர்கள் கட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக் கோரி சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில்(கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி சாதிப் பெயரைச் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு … Read more

வீட்டுப் பணியாளர், உதவியாளர், டிரைவருக்கு ரூ.3.95 கோடி ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி பங்குகள் பரிசு: நிர்வாக இயக்குநர், சிஇஓ வைத்யநாதன் தகவல்

புதுடெல்லி: தனது கார் டிரைவர், வீட்டுப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக அளிப்பதாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி. வைத்யநாதன் தெரிவித்துள்ளார். தனது பயிற்சியாளருக்கு 3 லட்சம் பங்குகளும், வீட்டுப் பணியாளர் மற்றும் டிரைவருக்கு தலா 2 லட்சம் பங்குகளும், அலுவலக உதவியாளர் மற்றும் வீட்டு உதவியாளருக்கு தலா ஒரு லட்சம் பங்குகளும் பரிசாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 9 லட்சம் … Read more

Russia-Ukraine crisis | 'ரத்தம் சிந்தும் அழிவுப் பாதை' – உலக நாடுகளின் எதிர்வினை என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: “மத்திய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய அழுத்தங்களை தமிழக அரசு தர வேண்டும்” என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அந்த நாட்டிற்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க … Read more