தென்காசி அருகே 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தின் விவசாய விளை நிலத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் சீ.ராஜகோபால், முனைவர் பிறையா, ஆகியோர் தலைமையிலான குழுவினர் தரையின் மேற்பரப்பில் பரவிக் கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலத்து கல்வெட்டுக்கள் தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மன்னர் திருமலை நாயக்கர் … Read more

பிஎஸ்எல்வி சி-52: வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் … Read more

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்: ஆப்கன் வெளியுறவு அமைச்சர்

விரைவில் சர்வதேச அங்கீகரம் பெறுவோம் என்று ஆப்கனில் ஆட்சி செய்யும் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை … Read more

பிப்ரவரி 14: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,37,896 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி 51.93%, கோவா 60.18%, உத்தராகண்ட் 49.24%

லக்னோ: உத்தராகண்ட், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் 2-ஆம் கட்ட தேர்தலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 51.93% வாக்குகள் பதிவாகின. கோவாவில் 60.18% மற்றும் உத்தராகண்டில் 49.24% வாக்குகள் பதிவாகின. கோவா மாநிலத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: கோவா சட்டப்பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி கோவாவில் 60.18% வாக்குகள் பதிவாகின. … Read more

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் – அபு இப்ராஹிம் அல் குரேஷி யார்?

வாஷிங்டன்: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பைடன், “நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷியை கொன்றுள்ளோம். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் எல்லை மற்றும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான … Read more

தினமும் 15,000… திருப்பதியில் நாளை முதல் தரிசன டோக்கன்கள் விநியோகம் – 2 டோஸ் செலுத்தியோருக்கே அனுமதி

திருப்பதி: திருப்பதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், 2 தடுப்பூசிகள் சான்றிதழுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனம் மூலம் தரிசிக்க நாளை செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் திருப்பதியில் 3 இடங்களில் தினமும் 15,000 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. கரோனா தொற்று பரவும் அபாயம் இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலசவ … Read more

மாஸ்க்குக்கு பதில் இனி கோஸ்க்?- தென் கொரியாவில் அறிமுகம்

சியோல்: தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், … Read more

பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? – 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: “‘2024 முதல் நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப் போகிறது’ என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேமாகப் பேசினார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகரத்துக்கு செய்யப்பட்ட சாதனைகளை விளக்கிய அவர், … Read more