மதுரை அதிகாரி அங்கித் கைது விசாரணையை டெல்லிக்கு மாற்றியது அமலாக்கத் துறை

புதுடெல்லி: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டெல்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க, மதுரை அமலாக்கத் துறை அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை … Read more

கனமழையால் சேதமடைந்த கோயில் கட்டுமானங்களை ரூ.5 கோடியில் சீரமைக்க தமிழக அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (டிச.26) ஆணையர் அலுவலகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட திருக்கோயில்களில் சேதமடைந்த கட்டுமானப் பணிகளை சீரமைப்பது குறித்து … Read more

வணிக கப்பல்கள் மீது தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் போர் கப்பல்களை நிறுத்தியது இந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய மங்களுரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கும் வழியில், இந்தியாவின் மேற்குகடற்கரை பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி மும்பை துறைமுகத்துக்கு வந்துள்ள எம்வி கெம் புளூட்டோ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்பு குழு திங்கள்கிழமை விரிவான ஆய்வு நடத்தியது. இந்தநிலையில் “அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்களில் … Read more

சென்னையில் டிச.28-ல் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா: கேரள முதலவர் பினராயி விஜயன் பங்கேற்பு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசு சார்பில் வரும் டிச.28-ம் தேதி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்வதாகவும், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் மற்றும் “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூல் வெளியிட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை … Read more

டெல்லியில் கடும் பனிப்பொழிவு: 30 விமானங்கள் தாமதம்

புதுடெல்லி: டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லியில் காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், கடந்த 3 நாட்களாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. இன்றும் 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. இது குறித்து டெல்லி விமான நிலைய தகவல் பலகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக தரையிறங்குவது மற்றும் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 30 … Read more

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தம்தான்” – லதா ரஜினிகாந்த்

சென்னை: இந்தியா சினிமாவின் உச்ச நடிகரும், தனது கணவருமான நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தம் அளித்ததாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து உங்கள் பார்வை என்ன என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. “அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள … Read more

இந்தியாவில் புதிதாக 116 பேருக்கு கோவிட் பாதிப்பு; கர்நாடகாவில் மூவர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜனவரியில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. 2 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் 2021 ஏப்ரலில் 2-வது கரோனா அலை உச்சத்தை தொட்டது. உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகின. அதன்பின்னர் கடந்த 2022 … Read more

கூகுள் மேப்ஸில் இந்திய பயனர்கள் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளதாக நிறுவனம் தகவல்

கூகுள் மேப்ஸின் ஆக்டிவ் பயனர்களாக இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தான் தங்கள் மேப்ஸ் தளத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் எனவும் கூகுள் மேப் எக்ஸ்பீரியன்சஸின் துணை தலைவர் மரியம் கார்த்திகா டேனியல் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு … Read more

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், அவர் மீண்டும் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய … Read more

‘இண்டியா கூட்டணியில் மீண்டும் விரிசல்’ – சரத் பவார் கருத்துக்கு பாஜக எதிர்வினை

புதுடெல்லி: கடந்த 1977 மக்களவைத் தேர்தலின் (எமர்ஜென்சி) போது பிரதமர் முகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ள கருத்துக்கு இண்டியா கூட்டணியில் மீண்டும் விரிசல் வெளிப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், கூட்டணியில் உள்ள சில கட்சிகள் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை முன்மொழிந்துள்ளன. இந்தநிலையில் தேசியவாத காங்கிஸின் தலைவர் சரத் … Read more