மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்: மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

சென்னை: மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மிகவும் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளன. இதையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும். அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் … Read more

மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்

போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு 5 அம்சங்கள் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. 1. மோடியை மையப்படுத்திய பிரச்சாரம்: ‘ம.பி. மக்கள் மனதில் மோடி, மோடியின் மனதில் ம.பி.’ என்ற பிரச்சாரத்தை பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் முன்னெடுத்தனர். இது காங்கிரஸ் கட்சியின் பல்வேறு வாக்குறுதிகளையும் பின்னுக்கு தள்ளியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி 14 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இதன் மூலம், மத்தியப் பிரதேசத்தின் மீது மோடிக்கு சிறப்பு … Read more

“ஓர் எல்லை வரை தான் கட்டுப்படுத்த முடியும்” – மிக்ஜாம் புயல் குறித்து கமல்ஹாசன்

சென்னை: “இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என மிக்ஜாம் புயல் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். … Read more

தெலங்கானாவில் காங்கிரஸின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு சுனில் கனுகோலு வகுத்த தேர்தல் வியூகம் காரணமா?

புதுடெல்லி: தெலங்கானாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. அம்மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி கே.சந்திரசேகர் ராவின் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததில் தேர்தல் நிபுணரான சுனில் கனுகோலு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 2023 தேர்தலில் காங்கிரஸ், சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுகட்டியுள்ளது. தற்போது … Read more

மிக்ஜாம் புயல் | நடிகர்கள் சூர்யா, கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் … Read more

பாஜக தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்வு: காங்கிரஸ் எண்ணிக்கை 3-ஆக குறைந்தது

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால், பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது. உத்தராகண்ட், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், 4 மாநில முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை … Read more

மிக்ஜாம் புயல் | புறநகர் ரயில் சேவை ரத்து; எழும்பூர், சென்ட்ரலில் இருந்து செல்லும் 25 ரயில்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பதிவாகி உள்ள நிலையில் இன்று (டிச.5, செவ்வாய்க்கிழமை) சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 தொலைதூர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை செல்லும் … Read more

மிக்ஜாம் புயல் | “மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான உதவிகளை வழங்கும்” – அமித்ஷா

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சவாலான சூழலை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான … Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர், எம்எல்ஏக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், களத்தில் பணியாற்றும் அமைச்சர், சட்டமன்ற … Read more

தெலங்கானாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி: ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பதவியேற்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி தெலங்கானா உருவானதற்கு காங்கிரஸே காரணம். ஆனால், மாநிலம் உதயமானது முதற்கொண்டு, பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலங்கானாவின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு … Read more