பிரதமரின் காப்பீட்டு திட்டங்களில் பிரீமியம் உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த 2015 ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி  பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 12 லிருந்து ரூ. 30 ஆகவும் மாற்றியமைக்கப்படுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளாக … Read more

பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு

டெல்லி: சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம்  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்து கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக உள்ளது.  2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த … Read more

மின் வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி புகார்

கரூர்: கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில்,  மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-  தமிழகம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.  குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. மின் வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான … Read more

பாதுகாப்பு படையினருக்கு வீர தீர விருதுகள்- குடியரசு தலைவர் வழங்கினார்.

டெல்லி: முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா விருதுகளை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.  நிகழ்ச்சியில், அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக, பாதுகாப்பு படையினருக்கான வீரதீர விருதுகளும்  வழங்கப்பட்டன. சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்டா … Read more

இந்தியாவுக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் இவர் இருக்கிறார்… மைக்கேல் வாகன் டுவீட்

லண்டன்: நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனில், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைடன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே மோசமான புள்ளிகள் எடுத்து வெளியேறின. குஜராத் டைடன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். கேப்டன்ஷிப்பை தவிர்த்து, ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் 487 ரன்களையும், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்தியாவிற்கு … Read more

சாலையோரம் நின்ற பெண்மணி கொடுத்த பரிசு – திடீரென காரை நிறுத்த சொன்ன பிரதமர்

சிம்லா: மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிம்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றார். மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது காரை திடீரென நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்றிருந்த மக்களில் ஒரு பெண்மணி தனது தாயாரான ஹீரா … Read more

குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு

குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் … Read more

இந்தியா கேட்டில் 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸ் சிலை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள … Read more

காவல் பணியைதான் முடிக்கிறேன்.. மக்கள் பணி தொடரும்.. – தாம்பரம் ஆணையர் ரவி

தாம்பரம் காவல் ஆணையர் டி.ஜி.பி. ரவி இன்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், பணி ஓய்வு பிரிவு உபசார விழாவில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியதாவது:- மக்களின் பணிதான் முக்கியம். மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை. மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். அரசாங்கம் வாய்ப்பு கொடுத்த போதெல்லாம் நான் மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். காவலர்கள் உடல்நிலையை நன்றாக வைத்திருந்தால்தான், மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும். தவறு யார் … Read more

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு அளிக்கிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றார். அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 2 நாள் ஆய்வு பணி முடிவடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- டெல்டா … Read more