ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது

திருப்பதி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இறுதி ஆட்டத்தின் போது ஆந்திர மாநிலம் சித்தூரில் பந்துக்கு பந்து பணம் கட்டி சூதாட்டம் நடைபெறுவதாக சித்தூர் டி.எஸ்.பி சுதாகர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி இன்ஸ்பெக்டர் எத்தியேந்திரா மற்றும் போலீசார் பால திரிபுரசுந்தரி கோவில் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். … Read more

காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

லிப்ரெவில்லி:  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் வரும் 7-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் காபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா … Read more

தென்கொரியா உடனான போட்டி டிரா – ஆசிய கோப்பை இறுதிக்கு இந்தியா தகுதிபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது. இதில், இந்திய அணி 4 – 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது. ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் … Read more

காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே முக்கியமாக இருந்தது – பிரதமர் மோடி தாக்கு

இடா நகர்:  சிம்லாவில் நடந்த மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு வழங்கும் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இதன்படி 10 கோடி விவசாயிகளுக்கு இன்று மொத்தம் 21,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: சிம்லாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிம்லா எனது கர்ம பூமி. பல வீர, தீர தியாகங்களைக் கெண்டது சிம்லா. இங்குள்ள … Read more

தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்.. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

ரூ.3,000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஒ) மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிப்பது அதிநவீன அஸ்திரா ஏவுகணை. இந்நிலையில், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2,971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க … Read more

சாக்கடையில் உருவாகும் கொசுக்களால் பரவும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்

சென்னை: கேரளாவில் தற்போது ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் சாக்கடையில் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இதையடுத்து வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ‘கியூவெக்ஸ்’ என்ற வகை கொசுக்கள் மூலம் வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நரம்பு … Read more

2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: வரும் பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜூன் முதல் வாரத்தில் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் புர்லியா பகுதியில் நடந்த கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறப் போவதில்லை. நீங்கள் எப்போதும் உள்ளே நுழைய முடியாது. 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்னி பாலா (36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தைச் (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராவார். இன்று காலை ஆசிரியை ராஜ்னி பள்ளிக்கூடத்தில் வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது, பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னியை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பயங்கரவாதிகள் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்த ஆசிரியை ராஜ்னியை மீட்ட … Read more

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

புகையிலை பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் கொடிய விளைவுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இந்தியாவின் பிரபலமான மணல் சிறப்க் கலைஞர் பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒடிசா கடற்கரையில் பல பெரிய சிகரெட் துண்டுகளின் மேல் பெரிய எலும்புக்கூடு படுத்திருப்பது போன்ற சிற்பம் … Read more