மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: மத்திய மந்திரி எல்.முருகனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பா.ஜனதா கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாளையொட்டி கட்சியினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள். பிரதமர் மோடி, மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தங்களின் அர்ப்பணிப்பு இளைஞர்களை … Read more

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நன்றி- பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது 89-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை சிம்லாவில் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் குருகிராமில் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். மேலும், மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் வெவ்வேறு … Read more

மாநிலங்களவை தேர்தல் – பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் உள்பட 12 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக மொத்தம் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.  இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.  மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை … Read more

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் ஐபிஎல் நிறைவு விழா – அகமதாபாத்தில் கோலாகலம்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.  இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி அசத்தினார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடக்கம்

சிலிகுரி: இந்தியா-வங்காளதேசம் இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா-குல்னா-கொல்கத்தா) மற்றும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா-டாக்கா-கொல்கத்தா) ஆகிய 2 ரெயில்கள் இயக்கபட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் போக்குவரத்து நிறத்தி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா குறைந்ததையடுத்து இன்று முதல் மீண்டும் இந்த ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக கிழக்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் உள்ள ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து வங்காளதேசம் டாக்கா … Read more

டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.  அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், உடல்நலக் குறைவால் போரூரில் உள்ள தனியார் … Read more

பிரபல பஞ்சாபி பாடகர் சுட்டுக் கொலை – பாதுகாப்பை விலக்கிய மறுநாளில் நடந்த பயங்கரம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்து வருபவர் சித்து மூஸ்வாலா. காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்தார். இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுடப்பட்டார். இதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் சித்து மூஸ்வாலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப் பகலில் பிரபல பாடகர் … Read more

தெரு பெயர்களில் உள்ள சாதியை நீக்கும் பணி தொடக்கம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் சாதி பெயர் கொண்ட தெருக்கள் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது. திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உள்ளாட்சி துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெருக்களுக்கு சாதிப் பெயர் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன் பேரில் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர் நீக்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் அப்பாவு கிராம தெரு 3-வது தெரு என்று 171-வது வார்டில் உள்ளது. இந்த தெருவின் பெயரில் உள்ள சாதி பெயரை மாநகராட்சி தற்போது நீக்கி … Read more

நாடு திரும்பினார் சத்குரு: குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளித்த இந்திய கடற்படை

மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு, வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார். குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் தரைப்படை, கடற்படை மற்றும் … Read more

ஜெர்மனி கண்காட்சியில் தமிழக அரங்கு அமைப்பு- தொழில் முதலீடுகளை ஈர்க்க தீவிரம்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சர்வதேச கண்காட்சிகளில் தமிழகத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகிறது. அந்த அரங்குகளில் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்தெந்த வகைகளில் எல்லாம் தேவையான சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கப்படுகிறது. அந்த வகையில் துபாய், அபுதாபி, ஜெர்மனியில் நடந்த தொழில் கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. அந்த … Read more