உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

ஜெனீவா : உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரையிலான நிலவரம் ஆகும். இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, “உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் … Read more

மும்பையில் கொரோனா 4-வது அலைக்கு வாய்ப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மும்பை : மராட்டியத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி 4-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாகும். இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனா அதிகரிப்பை அடுத்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று … Read more

இலங்கைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கியது இந்தியா

கொழும்பு: கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா வழங்கிய ரூ.58 கோடி நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆவன செய்வதாக மந்திரி உறுதி … Read more

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 141 ரன்னில் ஆல் அவுட்- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 236/4

லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் … Read more

மாநிலங்களவை தேர்தல் – 41 பேர் போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்தது இதற்கிடையே, வேட்பு மனுக்கள் பரிசீலனை முடித்து, திரும்ப பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா … Read more

மதம் மாற சட்டப்படி தடையில்லை – டெல்லி ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். … Read more

பிரெஞ்சு ஓபன்- இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ரபேல் நடால், காஸ்பர் ரூட்

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர். முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடந்த 2-வது சுற்றில் ஸ்வெரேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை. … Read more

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியில் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவி

வாஷிங்டன்: அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ஸ்பெல்லிங் சொல்லும், தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்தப் போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில் மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச்சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.   இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் ஸ்பெல்லிங் பீ என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்

4.6.2022 00.50: ரஷிய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலந்தில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு – 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல்

அமராவதி: ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட போரஸ் என்ற ரசாயன ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில், 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவு அருகிலுள்ள நிறுவனத்திற்கும் … Read more