சிறுமி காரில் கடத்தி பலாத்காரம்- தெலுங்கானா அமைச்சர், எம்.எல்.ஏ. மகன்கள் கோவா தப்பி ஓட்டம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருடன் படிக்கும் தோழிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சொகுசு ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாடினர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 80 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் விழா முடிந்து சிறுமி படிக்கட்டு வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை தூக்கி காரில் … Read more

பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

பாரீஸ் உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் … Read more

திருமணத்திற்கு முன்பு காதலன் பலி- காதலை காவியமாக்கிய இளம்பெண்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – பத்மாவதி தம்பதியினரின் மகன் சபரிகிருஷ்ணன் (வயது26). இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா – மோகன் ஆகியோரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணனும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 20.8.21 அன்று திருமண நாள் குறித்து, அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு … Read more

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம்

புது டெல்லி: டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் யமுனா விடுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாணவர்கள் நடந்து சென்றபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது அங்கு மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். … Read more

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கிடையில், தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்துவருகிறார். மேலும், தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் … Read more

13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்- பரபரப்பு சம்பவம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் திருடப்பட்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அப்பகுதி போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பக்கமாக வந்த கார் ஒன்று வேகமாக போலீசாரை கடக்க முயன்றது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, வேகமாக சென்ற அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து வாகனத்தில் மோதியது.  இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காரை ஓட்டிவந்தவர் … Read more

காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி- நக்மா விரைவில் கட்சி மாறுகிறார்

இந்திய அரசியலில் ஜனநாயக கட்சி என்றால் அது காங்கிரசாக தான் இருக்க முடியும். ஏனென்றால் மற்ற கட்சிகளில் மேலிடத்தை பற்றி விமர்சனம் செய்தால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை பாய்ந்து விடும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் கோஷ்டிகளும் அதிகம் உண்டு. அதே சமயம் கருத்துகள் சொல்வதற்கும் சுதந்திரம் உண்டு. கட்சியை பற்றியோ மற்ற தலைவர்கள் பற்றியோ யார் எந்த கருத்தை சொன்னாலும் அவர்கள் மீது கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. சொன்னால் சொல்லிவிட்டு … Read more

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்திய பாகிஸ்தான்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை … Read more

கர்நாடகாவில் இலவசமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த 200 விவசாயிகள்

சிக்கமகளூரு : கர்நாடகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர். 2-வது நாளான நேற்றும் ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பயணம் … Read more

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் மேற்கத்திய நாடுகள்தான்- புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷியாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.  இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டினார். இதுகுறித்து … Read more