சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு குறைவாக வழங்கப்படும் – காங்கிரஸ் வாக்குறுதி

ஹரித்துவார்: உத்தர காண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை வழங்கினார்.  உத்தர காண்ட் மாநிலத்தில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை ரூ. 500க்கு குறைவாக நிர்ணயம் செய்தல், 5 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 40,000 ரூபாய் மற்றும் வீட்டு வாசலில் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு – ஐந்து நாள் மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்தது

இகரா: மொராக்கோவின்  வடக்கு பகுதியில்  இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான்.  உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் … Read more

மைதானத்திற்குள் புகை பிடித்த கிரிக்கெட் வீரர் – சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்

டாக்கா: வங்காளதேசத்தில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.  அப்போது களத்தில் இருந்த சில வீரர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷாஜாத் புகை பிடித்துள்ளார். இதைக்கண்ட மூத்த பேட்ஸ்மேன் தமிம் இக்பால் அவரை டிரஸ்ஸிங் அறைக்குள்  செல்லுமாறு கூறியுள்ளார்.  இது குறித்த புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வைரலாகியது. இதையடுத்து ஷாஜாத்தை பயிற்சியாளர் மிசானூர் ரஹ்மான் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின. … Read more

இரண்டு இந்தியா கருத்து – ராகுல் காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா கண்டனம்

ராய்பூர்: மத்திய அரசு நாட்டை இரண்டாகப் பிரிப்பதாகவும், கோடீஸ்வரர்களுக்காக ஒன்று, கோடிக்கணக்கான சாமானியர்களுக்காக மற்றொன்று என இரண்டு இந்தியா இருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கருத்தை  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, கடுமையாக சாடியுள்ளார்.  ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமை, ஊழல் மற்றும் … Read more

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனுக்கு அருகிலுள்ள யூனியன் சதுக்கத்தில்  8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு இந்திய தூரகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நாசகார செயலை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது என்று நியூயார்க் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. காந்தி சிலை … Read more

ஜூனியர் உலக கோப்பையை 5வது முறை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு

19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார்.  இது … Read more

மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

இம்பால்: மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் இம்பால் மேற்கு போலீஸ் கமாண்டோக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு நடத்திய தேடுதல் வேட்டையில்  மூன்று வெவ்வேறு கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் … Read more

2016 ஐ.பி.எல்.தொடரில் கேப்டனாக பட்டம் வெல்லாதது ஏமாற்றம் அளித்தது – விராட் கோலி கருத்து

2016ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைவராக இருந்த விராட் கோலி தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அது இன்னும் வலிக்கிறது. அந்த நாளில் நாங்கள் போதுமானதாக விளையாடவில்லை. அது ஒரு விளையாட்டு என்று நான் நினைக்கிறேன், … Read more

லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

அபுதாபி: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது.  பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் … Read more

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 189 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து- சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4 விக்கெட் வீழ்த்திய ரவி குமார் 4-வது … Read more