லதா மங்கேஷ்கர் உடல் நிலை சீராக உள்ளது: சகோதரி ஆஷா போஸ்லே தகவல்

மும்பை: இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் … Read more

பொருளாதாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு உ.பி.யை 2-வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது: ராஜ்நாத் கோவிந்த்

உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னணி தலைவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று பா.ஜனதா மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் பொருளாதாரத்தை 31 லட்சம் கோடி ரூபாய்க்கு எடுத்துச் சென்றுள்ளது. இது இந்தியாவின் 2-வது இடமாகும். இதையும் படியுங்கள்… பஞ்சாப் தேர்தல்- … Read more

எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள்: அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம்- அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அலிகார் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ‘‘எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள். அனைத்து பிரச்சினைகளும் தீரும். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பற்றி பேசுவோம். அலிகார் மக்கள் பா.ஜனதாவுக்கான கதவை மூடிவிட்டனர். பா.ஜனதாவின் விதிக்குக்கு பூட்டுபோட்டு சீல் வைத்துள்ளனர். மாவ் பகுதியில் நடைபெற்ற என்னுடைய முதல் கூட்டத்தில், லக்னோவில் உள்ள பா.ஜனதாவின் தலைமையகம், மற்றும் … Read more

வரும் 8-ந்தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி இன்று மாலை சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக்கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த … Read more

சட்டசபை சிறப்பு கூட்டம் விரைவில் கூடுகிறது- மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நீட் தேர்வு முறையால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதால் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கிடையே நீட் தேர்வு பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தில் பின் … Read more

இந்தியா முழுவதும் 3-ல் ஒரு பங்கு கடற்கரை கடலரிப்பால் சேதம்- மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: இந்தியா மூன்று புறமும் கடல்களால் சூழப்பட்ட தீபகற்பம். இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபி கடல் என 3 கடல்களும் இந்தியாவின் அரண்களாக உள்ளன. கடலால் சூழப்பட்ட இந்தியாவின் கடற்கரைகள் அனைத்தும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளாகும். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நகர்புறத்தில் உள்ள 2-வது நீண்ட கடற்கரை என்ற சிறப்பு கொண்டது. இதுபோல கோவா, கேரள மாநிலங்களிலும் பல அழகிய கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரை பகுதிகள் அனைத்திலும் 2004-ம் … Read more

சீன ஆக்கிரமிப்பு விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்- அமெரிக்கா

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து ஆதரிப்போம். சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் வளமை, பாதுகாப்பு கருதி, எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் … Read more

லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.  இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் … Read more

3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது – முன்னாள் முதல்வரின் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, … Read more