தனியார் பள்ளிகளில் படிப்போருக்கு மாற்று சான்றிதழ் தர தடை விதிப்பு..!!

புதுச்சேரியில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஏதாவது காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத் தொடங்கியதாக புகார்கள் வந்தன. இவ்விவகாரம் கல்வித் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்ட உத்தரவில்., “புதுச்சேரியில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் … Read more

சூடானில் இருந்து இந்தியர்கள் 360 பேர் தாயகம் வருகை!!

ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து 360 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை … Read more

2 நாட்கள் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..!!

அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். சேலம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, … Read more

குட் நியூஸ்..!! அடுத்து 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும்..!!

டெல்லியில் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, நாட்டில் அடுத்த 24 மாதங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என கூறியுள்ளார். இதன்படி, ரூ.1,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால், மருத்துவ உபகரணங்கள் பிரிவானது அடுத்த 5 ஆண்டுகளில், தற்போதுள்ள ரூ.89,957 கோடியில் இருந்து, ரூ.4,08,897 கோடியாக வளர்ச்சி … Read more

விரைவில் வருகிறது ஜியோ ஏர்ஃபைபர்..!! கேபிள்கள் இல்லாத புது வைஃபை..!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், வீடு மற்றும் அலுவலகங்களில் வைஃபைக்கான ஜியோ ஏர்ஃபைபர் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ( ஆர்ஐஎல் ) தலைவர் கிரண் தாமஸ், அடுத்த சில மாதங்களில் #JioAirFiber அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். ஜியோ ஏர்ஃபைபர் “நிறுவனத்தின் இணைக்கப்பட்ட வீடுகள் மூலோபாயத்தை துரிதப்படுத்தும்” என்று அவர் நம்புகிறார். ஜியோ நிறுவனம் AirFiber கேபிள்கள் அல்லாத புதிய தொழில்நுட்பத்துடன் வருகிறது. இவை அருகிலுள்ள ஜியோ … Read more

தமிழக அரசின் திருத்தப்பட்ட விதிகளுக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்..!!

திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு உரிமம் பெற்றவர்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது. இதனை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் … Read more

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தல் – 12 மணி நேரத்தில் மீட்பு..!!

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). கடந்த 22ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினியின் அருகிலிருந்த எஸ்தர் ராணி, உமா ஆகியோர் உதவி செய்வதுபோல் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி, 12 மணி நேரத்தில் குழந்தையை … Read more

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல்!!

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. திடீரென பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார். இதனால் பள்ளி மாணர்கள் அச்சம் அடைந்தனர். அந்த நபர் தனது கையில் ஆசிட் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை எல்லாம் பார்த்த பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். அப்போது, அந்த … Read more

வைரத்தில் பற்கள் செய்த வியாபாரிகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரத்தில் பற்களை செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தங்கத்தில் பல் கட்டி பார்த்திருப்போம். ஆனால் வைரத்தில் பற்கள் கட்டி இப்போது தான் பார்க்கிறோம். ஆம், சூரத் நகரில் வைரத்தில் பற்களை செய்து வியாபாரிகள் அசத்தியுள்ளனர். வைரத்தை வைத்து 16 பற்களை செய்யும் வியாபாரிகள், அதில் சுமார் 2000 வைர கற்களை பதிக்கிறார்கள். வைரங்கள் மட்டுமில்லாது, தங்கம் மற்றும் வெள்ளியையும் இவர்கள் இந்த பற்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள். வைரங்கள் மற்றும் வெள்ளியை … Read more