தேர்தலில் தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக தேர்வு

டேராடூன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகாண்ட் முத்வல்ரவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.   இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங் இன்று முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.    உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக … Read more

சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து நாளையும் ஓபிஎஸ்சிடம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க முற்பட்டது, அமெரிக்க மருத்துவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்துவிட்டு, சிகிச்சை அளிக்காமல் ரிட்டன் ஆனது குறித்தும்,  ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் … Read more

இந்திய ராணுவத்தில் சேரும் கனவுடன் நள்ளிரவில் ஓடும் வாலிபர்… சமூகலைத்தளத்தில் வைரலான வீடியோ…

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை பார்க்கும் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது வாலிபர் தினமும் இரவு நேரங்களில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த வினோத் கப்ரி கடந்த சனிக்கிழமை இரவு நொய்டா சாலையில் சென்று கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் தனது முதுகில் ஒரு பையுடன் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தார். இரவு நேரத்தில் ஒருவர் ஓடிச்செல்வதை பார்த்து ஏதாவது விபரீதமாக இருக்குமோ என்று நினைத்து தனது … Read more

டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு டி.ஆர்.பாலு நேரில் அழைப்பு…

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள  திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள்நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து ராகுல்காந்தியையும் சந்தித்து அழைப்பு விடுத்தனர். டெல்லியில்  திமுகவுக்கு கட்சிக்கு பாஜக கட்சி  அலுவலகம் அமைந்துள்ள  தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.  அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்படும் இந்த கட்டி திறப்பு விழா ஏப்ரல் 2ந்தேதி நடைபெற உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் … Read more

தமாகா பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் ஆதரவாளர்களுடன் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…

சென்னை: தமாகா பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் தனது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் திரு எம்.விச்சு லெனின் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துக்கொள்கிற … Read more

அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அமீரகத்தில் உள்ள புஜைரா மதப் ஸ்பிரிங் பார்க்கில் நேற்று (மார்ச் 20ம் தேதி) நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். கல்லூரி இந்நாள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஷபிர் அகமதுவும் செயலர் முத்துராமனும் மேற்கொண்டனர்.

10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி! அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனர்களுக்கு நகைகள் திருப்பி வழங்கப்படும் என  அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்குக்கு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் கூறினர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யப்படவில்லை, எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த … Read more

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது!

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த  தனித்தீர்மானம், திமுக, அதிமுக, பாஜக உள்பட  அனைத்துகட்சிகளின்  ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் … Read more

சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் தாக்கல் செய்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் … Read more

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜர் ஆகி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அப்போலோ வழக்கால் சுமார் இரண்டு ஆண்டுகாலம் முடக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் விசாரணையில், சில … Read more